சேலம் செய்திகள்: சேலம் மத்திய சிறையில் இன்று சட்ட அமைச்சர் ரகுபதி (S. Regupathy) ஆய்வுக்காக வந்து இருந்தார் அப்போது அமைச்சருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாது திமுகவை சேர்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அமைச்சருடன் சிறைச்சாலைக்குள் சென்றதால் கட்டுப்படுத்த முடியாமல் விழிப்பிதுங்கி நின்ற சிறை அதிகாரிகள்
மத்திய சிறை என்பது உச்சகட்ட பாதுகாப்பு மிகுந்த பகுதியாகும் இந்த சிறைக்குள் செல்வதென்றால் முன் அனுமதி பெற்றே செல்ல முடியும். மத்திய சிறையின் உள்ளே செல்வதற்கு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளதாக சட்டம் உள்ளது.
இந்த நிலையில் திமுகவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் சேலம் மத்திய சிறை வளாகத்தின் உள்ளே சென்றது சட்ட விரோதமாகும். மத்திய சிறையின் சட்டம் குறித்து சட்ட துறை அமைச்சர் ரகுபதிக்கு (Law minister Regupathy) தெரியுமா? தெரியாதா? என்பது குறித்து கூட தெரியாத அளவிற்கு அமைச்சர் இருந்தது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ALSO READ | இரட்டை வேடம்போடுவதே திமுகவுக்கு வாடிக்கை - கடம்பூர் ராஜூ சாடல்
மேலும் சட்ட அமைச்சருக்கு தெரிந்தே திமுகவினர் (DMK) உள்ளே சென்றிருந்தால் அமைச்சர் மீதும் திமுகவினர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
செய்தியாளர்களுக்கு தடை! ஆளும் கட்சிகாரர்களுக்கு அனுமதி!#ZeeTamilNews | #Law | #Minister | #SRegupathy | #salem | #CentralJail pic.twitter.com/Z9LNAVHUQu
— Zee Hindustan Tamil (@ZHindustanTamil) January 3, 2022
பொதுவாக அமைச்சர்கள் ஆய்வுக்கு செல்லும் இடங்களில் ஆளுங்கட்சியினர் உடன் செல்வதும் வழக்கமான ஒன்று அப்படி செல்லும் கட்சியினர் முண்டியடித்துக்கொண்டு புகைப்படம் எடுப்பதும் வழக்கமான ஒன்று தான் என்றாலும், சட்ட அமைச்சர் தனது கட்சிகாரர்களையும் உள்ளே கூட்டிச்சென்றது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதே போல்தான் மத்திய சிறையிலும் காணப்பட்டது. எந்தவித தயக்கமும் இல்லாமல் அமைச்சருடன் திமுகவினர் சென்றது பார்வையாளர்களை பல்வேறு கேள்விகளுக்கு உள்ளாக்கி உள்ளது. ஆனால் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை மட்டும் சிறைச்சாலைக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டது தான் வேதனையிலும் வேதனை.
ALSO READ | பழிவாங்கும் நடவடிக்கையால் அதிமுகவை அசைத்து விட முடியாது: முன்னாள் முதல்வர் ஆவேசம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR