Tamil Nadu Political News: அதிமுகவை செந்த 14 முன்னாள் எம்எல்ஏக்கள் நேற்று (வியாழக்கிழமை) பாஜகவில் இணைந்தனர். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் இணை அமைச்சர் எல். முருகன் தலைமையில் இணைந்தனர். இதுக்குறித்து சமூக ஊடகங்களில் வயதான காலத்தில் ஓய்வில் இருந்தவர்களை வலுக்கட்டாயமாக டெல்லிக்கு அழைத்துக் கொண்டு போய் பாஜகவில் இணைந்துள்ளனர் என்றும், அவர்கள் அரசியல் களத்தில் இருந்து விலகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது, அவர்களால் எந்த பயனும் இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தது. அதற்கு பதிலடி தரும் வகையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சேலஞ்சர் துரை பதில் அளித்துள்ளார்.
பாஜகவில் சேர்ந்த அதிமுகவினருக்கு உற்சாக வரவேற்பு
டெல்லியில் நேற்று பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் விமானம் மூலம் கோவை திரும்பினர். கோவை நிலையத்தில் பா.ஜ.கவினர் மேளதாளம் முழங்க அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னாள் எம்.எல்ஏக்கள் சேலஞ்சர் துரை, சின்னசாமி, ரத்தினம், செல்வி முருகேசன் உள்ளிட்ட பலர் பா.ஜ.க துணை தலைவர் கே.பி.ராமலிங்கத்துடன் வந்திருந்தனர்.
இதனையடுத்து கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். "அப்போது நேற்றைய தினம் தமிழகத்தைச் சார்ந்த 15 முன்னாள் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்து உள்ளனர்.
மேலும் படிக்க - திமுகவை கடுமையாக விமர்சித்த எஸ்பி வேலுமணி... பாஜக குறித்து கப்சிப்..!
நல்ல ஆட்சியை பாஜகவால் மட்டும் தர முடியும் -கே.பி. ராமலிங்கம்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உடன் பணிபுரிந்த நேர்மையான முன்னாள் உறுப்பினர்கள் இன்று தூய ஆட்சியை தமிழகத்துக்கு பாஜகவால் மட்டும் தர முடியும் என்பதற்காக இணைந்து உள்ளனர். இன்னொரு 30 ஆண்டு காலத்துக்கு தகுதி படைத்த ஆற்றலாக இருக்கக்கூடிய அண்ணாமலை கரத்தை வலுப்படுத்த, ஆலோசனைகள் சொல்லி, தங்களது அனுபவங்களை இளம் தலைவருக்கு ஊட்ட இவர்கள் பாஜகவில் இணைந்து உள்ளார்கள். இவர்களை மகிழ்ச்சியுடன் பா.ஜ.க வரவேற்கின்றது எனவும் தெரிவித்தார்.
திமுக, அதிமுகவில் இருந்து நிறைய பேர் பாஜகவில் இணைவார்கள்
வரும் 11 ஆம் தேதி ஜே.பி. நாட்டா தமிழகம் வரும் போது இன்னொரு பட்டியல் வெளியாகும் எனவும், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு திமுக, அதிமுகவில் இருந்து நிறைய பேர் வெளியே வரலாம், அதிமுகவில் இருந்து பாதி பேர் பாஜகவில் இணையலாம் எனவும் தெரிவித்தார்.
இன்னும் அதிமுக, திமுகவிலிருந்து பல்வேறு தடைகளை தாண்டி கதவை உடைத்து கொண்டு பாஜகவில் இணைய இன்னும் சில பேர் காத்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க - அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் முடியாது -அதிமுக ஆர்.பி.உதயகுமார்
இன்னும் அடுத்த பல ஆண்டுகள் பாஜக ஆட்சி தான் -சேலஞ்சர் துரை
இதனைத்தொடர்ந்து பா.ஜ.கவில் இணைந்த அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சேலஞ்சர் துரை செய்தியாளர்களிடம் பேசுகையில், "அப்போது தேசியமும், ஆன்மீகமும் கலந்து இந்திய நாட்டை பிரதமர் மோடி வழி நடத்தி செல்கின்றார். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் பா.ஜ.க இருக்கின்றது. இன்னும் அடுத்த பல ஆண்டுகள் பா.ஜ.க தான் ஆட்சியில் இருக்கும்.
மக்கள் முன்னேற்றத்திற்கு தேசிய நீரோட்டம் தான் சிறந்தது -சேலஞ்சர் துரை
எங்கள் அனுபவங்களை, பாஜக கட்சியில் இணைந்து மக்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காகவும், தொழிற்சாலைகளும், விமான நிலையங்களும், ஏழை எளிய மக்கள் முன்னேற்றத்திற்கு தேசிய நீரோட்டம் தான் சிறந்தது என உணர்ந்து அதில் பயணிக்க முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
மேலும் படிக்க - இரட்டை இலை சின்னம் மீண்டும் முடங்கும் என ஓபிஎஸ் அணி பகிரங்க எச்சரிக்கை
இளம் தளபதி அண்ணாமலை கரத்தை வலுபடுத்துவோம் -சேலஞ்சர் துரை
ஊழல் பட்டியல் வெளியிடும் இளம் தளபதி அண்ணாமலை தலைமையில் நாங்கள் பயணித்து அவரை கரத்தை வலுபடுத்துவோம் எனவும், ஒரு போதும் ஏழை எளிய மக்களை ஏமாற்றுபவர்களை விட மாட்டோம், மக்களை மேன்மைப்படுத்த வேண்டும், ஊழலில் இருந்து விடுபட வேண்டும், ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பதற்காக இணைந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி இளமையானவரா? -சேலஞ்சர் துரை
எங்களை வயதானவர்கள் என்று சொல்கிறார்கள்.. அப்படியெனில் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன் எல்லாம் இளமையானவர்களா என கேள்வி எழுப்பிய சேலஞ்சர் துரை, நாங்கள் என்ன டெல்லிக்கு அவர்களை போல தவழ்ந்து போய் வந்தவர்களா? இப்போதும் செயல் திறமை உள்ளவர்கள் தான் என பதில் அளித்தார்.
அண்ணாமலையின் பணி மெய்சிலிர்க்க வைக்கிறது -சின்னசாசி
இதனைதொடர்ந்து பேசிய, சிங்கநல்லூர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னசாமி, "நிறைய தலைவர்களுடன் பழகி இருக்கிறேன். அவர்களில் அண்ணாமலையின் பணி எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஊழல் மலிந்த திமுக மற்றும் அதிமுகவை ஒழிப்பதற்கு வந்திருப்பவர் தான் அண்ணாமலை என அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க - கொத்து கொத்தாக பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ