முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: தமிழகத்தில் அரசு விடுமுறை

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவை ஒட்டி, அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது!  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 17, 2018, 07:49 AM IST
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: தமிழகத்தில் அரசு விடுமுறை title=

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவை ஒட்டி, அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது!  

முன்னாள் பிரதமர் மற்றும் பாரத்திய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் கடந்த ஜூன் 11-ஆம் நாள் டெல்லி AIIMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் பரிந்துறையின் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரது நலன் குறித்து சிறப்பு கவனம் ஏற்றுக்கொள்ள மருத்துவர் ரண்டீப் குலேரியா நியமிக்கப்பட்டுள்ளார். 

இவரது மேற்பார்வையில் வாஜ்பாயி அவர்களுக்கு கடந்த 9 வாரங்களாக மருத்துவ கண்கானிப்பு நடைப்பெற்று வந்தநிலையில், நேற்று மாலை 5.57 மணியளவில் சிகிச்சைப்பலனின்றி காலமானார். இதையடுத்து, டெல்லி கிருஷ்ணன் மேனன் மார்க்கில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, உட்பட பல்வேறு கட்சி அமைப்பினர்களும் வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவை ஒட்டி, தமிழகத்தில் இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அரசு கருவூலங்கள் மட்டும் குறைவான பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

Trending News