Mega vaccination camp: தமிழகத்தில் இன்று 4வது மெகா தடுப்பூசி முகாம்..!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக நான்காவது வாரமாக இன்றும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 3, 2021, 12:36 PM IST
Mega vaccination camp: தமிழகத்தில் இன்று 4வது மெகா தடுப்பூசி முகாம்..!!  title=

தமிழகம் முழுவதும் இன்று நான்காவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் (Mega vaccination camp) நடத்தப்படுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரையில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில், இம்முறை இந்த தடுப்பூசி முகாமில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசிகள் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா மூன்றாவது அலையை (Corona Virus Third Wave)கருத்தில் கொண்டு, தமிழக மக்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்திட தமிழக அரசு திட்டமிட்ட நிலையில், தமிழகம் முழுவதும் முதல் மெகா தடுப்பூசி முகாம் கடந்த மாதம் 12ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்ட நிலையில் 29 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சுகாதாரத்துறை சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | Vaccine Camp: தடுப்பூசித் திருவிழா; ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி

பின்னர் இரண்டாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி 15 லட்சம் பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கைவிட கூடுதலாக 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. கடந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற மூன்றாம் கட்ட முகாமில் 23 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவ்வாறு, கடந்த மூன்று முறை நடந்த மெகா தடுப்பூசி முகாம்களில், சுமார் 70 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஒவ்வொரு முறையும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக செலுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை இம்முறையும் இலக்கை விட கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

ALSO READ: 1 கோடி டோஸ் கூடுதல் தடுப்பூசிகள் தேவை: மத்திய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News