துபாயில் இருந்து ஜுஸ் மிக்சரில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.1.83 கோடி மதிப்பிலான 2579 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய்,மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, வியட்நாம், உள்ளிட்ட பல்வேறு முக்கிய வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை, ஹைதராபாத், உள்ளிட்ட பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கத்தை அதிக அளவில் கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஒரு பயணியின் உடைமைக்குள் இருந்த புட் புராசசர் மற்றும் ஜுஸ் மிக்சர் சாதனத்தை சோதனை செய்த போது அதில் 2579 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.1.83 கோடி ஆகும். இதனை தொடர்ந்து அந்த பயணியிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் வெளிநாட்டு கரன்சிகள் பறவைகள், பாம்புகள் உயிரினங்கள் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் வருகிறது.. சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டாலும் பயணிகள் "குருவி" என்ற போர்வையில் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வரும் சம்பவம் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
ஆகவே கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவரகள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது.
கடந்த 11 ஆம் தேதி திருச்சி விமான நிலைய இரண்டாவது முனையம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. நான்கு நாட்களில் முதல் முறையாக அதிக அளவு ஒரே சமயத்தில் தங்கம் கடத்தி வந்து பிடிபட்டுள்ளது.
மேலும் படிக்க | மேடையில் அமித்ஷா என்ன சொன்னார்...? சர்ச்சைக்கு பின் வாய் திறந்த தமிழிசை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ