Pongal Bonus for Government Employee: அரசு ஊழியர்களுக்கான பொங்கல் போனஸை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சி மற்றும் டி பிரிவு பணியாளருக்கு பொங்கல் பரிசாக மிகை ஊதியம் வழங்கிட 163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். அதுக்குறித்து முழு விவரத்தையும் பார்ப்போம்.
பொங்கல் போனஸ் பரிசு அறிவிப்பு
பொங்கல் பரிசு குறித்து வெளியிடப்பட்டு இருக்கும் அறிவிப்பில், "மக்கள் நலத்திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு செல்லும் வகையில அயராது ஒழித்திடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 163 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு..க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
ஆசிரியர்களுக்கு ரூ.3000 மிகை ஊதியம்
இந்த உத்தரவின்படி, சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3000 என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும் என்றும்,
ரூபாய் ஆயிரம் சிறப்பு மிகை ஊதியம்
தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2023-24 நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேர பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் ஆயிரம் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஓய்வூதியதாரர்களுக்கு ரூ. 500 பொங்கல் பரிசு
சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதாரர்கள் ஆகியோருக்கு ரூ. 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.
பொங்கல் பரிசு வழங்க ரூ.163.81 கோடி ஒதுக்கீடு
பொங்கல் பரிசாக போனஸ் வழங்கிட ரூ.163.81 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே விரைவில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும்.
மேலும் படிக்க - பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் இன்று முதல் விநியோகம் - பெறுவது எப்படி?
மேலும் படிக்க - தமிழ்நாடு அரசின் திருமண நிதியுதவி திட்டம் : யாருக்கெல்லாம் கிடைக்கும்?
மேலும் படிக்க - இனி ஆன்லைனிலேயே மேரேஜ் ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம்! தமிழ அரசின் புது திட்டம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ