என்ன ஆச்சு சென்னைக்கு? எல்லாருக்கும் காய்ச்சலா?!

சென்னையில் இடைவிடாது கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக மக்கள் பலரும் அல்லல்பட்டு வருகின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 18, 2021, 10:35 AM IST
  • கன மழையின் காரணமாக தேங்கிக்கிடக்கும் அசுத்த நீர், நன்னீருடன் கலந்து மக்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்த பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள, இன்னும் சிறிது நாட்களுக்கு தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து குடிப்பதன் வேண்டும்.
என்ன ஆச்சு சென்னைக்கு? எல்லாருக்கும் காய்ச்சலா?! title=

சென்னை : சென்னையில் இடைவிடாது கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக மக்கள் பலரும் அல்லல்பட்டு வருகின்றனர்.  பல குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தும், பல வழித்தடங்களில் பாதிப்பு ஏற்பட்டும் மக்கள் தவித்து வரும் நிலையில் மேலும் சென்னை மக்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் ஒன்று நடந்திருக்கிறது.

ALSO READ வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை; ‘இந்த’ மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

அதாவது கன மழையின் காரணமாக தேங்கிக்கிடக்கும் அசுத்த நீர், நன்னீருடன் கலந்து மக்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தியுள்ளது.  இந்த அசுத்த நீரை பருகியதால் பலருக்கும் வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு தவித்து வருகின்றனர்.  அடைமழையில் அல்லல்பட்டு வரும் இந்த நேரத்தில் இப்படி ஒரு துன்பமும் சென்னை மக்களை வாட்டி வதைத்து வருகிறது.  இதன் காரணமாக பலரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு நாட்களில் குணம் அடைந்தாலும், இது மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

chennai

எனவே இந்த பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள, இன்னும் சிறிது நாட்களுக்கு தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து குடிப்பதன் வேண்டும்.  அவ்வாறு நன்கு கொதிக்க வைக்கப்பட்ட நீரை குடித்தால் மட்டுமே பெரிய அளவில் உடல் உபாதைகள் ஏற்பட்டு விடாமல் தங்கள் உடலை பல நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.  தற்போது மழை காலங்களில் டெங்கு, மலேரியா போன்ற கொடிய காய்ச்சல்கள் பரவும் நேரம் என்பதால் மக்கள் தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

ALSO READ கோவை: குடிபோதையில் அலுவலகம் வந்த அரசு ஊழியர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News