பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் என புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில் இளையராஜா குறிப்பிட்டிருந்தார்.
அவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துவருகிறது. ஆனால் தனது கருத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்பதில் இளையராஜா உறுதியாக இருப்பதாக அவரது சகோதரர் கங்கை அமரன் நேற்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | இளையராஜாவுக்கு எதிராக மகன் யுவன்சங்கர்ராஜா சர்ச்சை பதிவு
இந்தச் சூழலில் இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,‘கருப்பு திராவிடன். தமிழனாக இருக்க பெருமைப்படுகிறேன்’ என பதிவிட்டு இருந்தார். அவரது இன்ஸ்டா பதிவு படுவைரலாகி இந்த விவகாரத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை யுவன் ஷங்கர் ராஜாவின் இன்ஸ்டா பதிவு குறித்து கூறுகையில், “நானும் கருப்பு திராவிடன்தான்.சத்தியமாக எனக்கு இந்தி தெரியாது. அவர் கருப்புதான். ஆனால் நான் அண்டங்காக்கை கருப்பு என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். தேவைப்பட்டால் இதுகுறித்து பாஜக தலைமைக்கு கடிதம் எழுத தமிழ்நாடு பாஜக தயாராக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | மோடி - அம்பேத்கர் ஒப்பீடு... தேசிய அளவில் இளையராஜாவுக்கு வலுக்கும் ஆதரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR