ராஜஸ்தானில் கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற சென்னை, மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைடுத்து, அங்கு சென்ற மற்ற காவலர்களும் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் போலீசார் முதல்கட்ட விசாரணை நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில்; பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்துள்ளது இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கியில் இருந்த குண்டு தான். இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கியால் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுடப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, முனிசேகர் ராஜஸ்தான் போலீசாரிடம் கூறியது; நானும், பெரியபாண்டியனும் கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற இடத்தில் எங்களை அவர்கள் கட்டையால் தாக்கினர். அப்போது, நான் கீழே விழுந்தேன். கையிலிருந்த என்னுடைய துப்பாக்கி கீழே விழுந்தது. அதனை பெரியபாண்டியன் தான் எடுத்தார். அப்போது, எங்களுடன் வந்த மற்ற காவலர்களின் உதவியால் நாங்கள் தப்பி வெளியே வந்தோம். எதிர்பாராதவிதமாக பெரியபாண்டியன் கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்டார்' என்று தெரிவித்தார்.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முனிசேகர் தவறுதலாக சுட்டதாலேயே பெரியபாண்டியன் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.