ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீடுக்கான அனுமதியை முறைகேடாக பெற்றுத்தர உதவியதாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த பிப்., 28-ம் தேதி காலை சென்னை விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
பின்னர் டெல்லி அழைத்து செல்லப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார். கிட்டத்தட்ட 15 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தியது சிபிஐ. நேற்று டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வரும் 24-ம் தேதி வரை டெல்லி திகார் சிறையில் கார்த்தி சிதம்பரத்தை அடைக்க உத்தரவிட்டது.
மேலும் கார்த்தி சிதம்பரத்திம் ஜாமின் மனுவின் மீதான விசாரணை 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஆனால், இன்று மீண்டும் ஜாமீன் மனு மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம். .
அதேபோல கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்த டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்து இருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது அமலாக்கப்பிரிவு. இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட் தீபக் மிஸ்ரா பென்ச், இதுதொடர்பான விசாரணை மார்ச் 15-ம் தேதி விசாரிக்கப்படும் எனக்கூறி தள்ளிவைத்து.