சிறுபான்மையினர் வாக்குகளை பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்!
தமிழ்நாட்டில் வரும் மே 19-ஆம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று அங்கு பிரசாரம் செய்தார்.
பிரச்சாரத்தின் போது., "முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்" என தெரிவித்தார்.
Tamil Nadu Minister K.T. Rajendra Balaji: Kamal Haasan's tongue should be cut off for his remarks on Hindu terror. He made these remarks to gain votes of minorities. We can't blame entire community for act of 1 individual. EC should take action against the actor & ban his party. pic.twitter.com/2O3nypPOtu
— ANI (@ANI) May 13, 2019
இதைத்தொடர்ந்து கமலின் இந்த கருத்திற்கு பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்தி நடிகர் விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில் "எப்படி கலைக்கு மதம் கிடையாதோ அதேபோல் தீவிரவாதத்திற்கும் மதம் கிடையாது" என தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களிடன் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள், சிறுபான்மையினர் வாக்குகளை பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் "யாரை திருப்தி படுத்த கமல் இவ்வாறு பேசி வருகின்றார்., யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால் அதற்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறைகூறுவதாக என கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் மதத்தை புண்படுத்தும் படி பேசும் கமலின் கட்சியின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்சியின் பதிவினையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.