'நீட்டுக்கு ஆதரவு கருத்து சொன்னதால் மருத்துவ அடிப்படை ஞானம் இல்லாதவர்கள் சமூக வலைதளங்களில் என்னை விமர்சிக்கின்றனர். சமூகத்தை காப்பாற்றவே பொது வாழ்க்கைக்கு வந்தேன். மருத்துவத்தை பற்றியோ, மருத்துவ அறிவாற்றல் இல்லாமலும் என்னை விமர்சிப்பதுதான் கருத்து சுதந்திரம். அதையும் வரவேற்கிறேன்' என புதுச்சேரியில் நடைபெற்ற மருத்துவ கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற மருத்துவ கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், ‘குறைபாடுடன் குழந்தை பிறந்தால் அதனால் அக்குடும்பம் படும் துன்பம் அளப்பரியது. அது அன்றைய தினத்தோடு போய்விடாது. நுண்ணியமாக பார்க்கும்போது சிறப்பு சிகிச்சை தந்தால் இயல்பான சூழலுக்கு கொண்டு வரமுடியும். லாபநோக்கை மட்டும் கருத்தில் கொள்ளாமல் சேவை மருத்துவர்கள் வரவேண்டும்.’ என்றார்.
ஆராய்ச்சி நோக்கில் அமைதியாக சிகிச்சை அளிப்போர் பலர். அரிதான நோய்க்கு சிகிச்சைகளை பல ஆண்டுகளாக தந்து அமைதியாக பணியாற்றுவோருக்கு அடையாளம் தந்து விருது அளிப்பதே மத்திய அரசின் நோக்கம் என்றவர், அரசியல்வாதியாக இருப்பதால் மருத்துவத்துறையின் விற்பன்னராக இருப்பதை பலரும் ஒத்துக்கொள்வதில்லை என்றார்.
‘சிலபேரிடம் இலகுவாக பழகும்போது எளிமையாக எடுத்துவிடுகின்றனர். மரபணு மற்றும் அரிதான நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.’ என்று அவர் கூறினார்.
மருத்துவ கண்டுபிடிப்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவிட்டால் வசதி இருந்தாலும் உயர் தொழில் நுட்பம் இரு்தாலும் அது பயன்பதராவிட்டால் கண்டுபடிப்புக்களுக்கு பயன் இல்லை எனவும் பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு மரபணு மற்றும் அரிதான நோய் குறைபாடு இருக்கக்கூடாது என்பதற்காக தெலங்கானாவில் தேசிய உணவு பாதுகாப்பு கழகத்துடன் ஒப்பந்தம் செய்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது, அது புதுச்சேரியிலும் தொடங்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தமிழிசை செளந்தரராஜன் ‘நல்ல மருத்துவர்கள், ஏழ்மை நிலையில்லோர் மருத்துவத்துக்கு வர நீட் ஆதரவு கருத்து சொன்னேன். ஆனால் மருத்துவத்தை பற்றியோ, மருத்துவத்துறை பற்றி அடிப்படை தெரியாதோர் இதில் விமர்சனம் செய்வதுதான் ஆச்சரியம். இணையத்தளத்தில் என்னை பற்றி மோசமாக விமர்சித்து எழுதுகின்றனர். எனது மருத்துவ முகத்தை அறியாமல் பரிசகிக்கிறார்கள். எத்தனையோ பேரை காப்பாற்றியவள் நான். சமூகத்தை காப்பாற்றவே பொது வாழ்க்கைக்கு வந்தேன்’ என்றார்.
‘மருத்துவத்தில் உச்சநிலையில் இருந்தபோது பொதுசேவைக்கு வந்தேன். மருத்துவத்தை பற்றியோ, மருத்துவ அறிவாற்றல் இல்லாமலும் என்னை விமர்சிப்பதுதான் கருத்து சுதந்திரம். அதையும் வரவேற்கிறேன்.’ என்று கூறினார் அவர்.
புற்றுநோய் இல்லாத சூழலை புதுச்சேரியில் கொண்டு வர தனியார் நிறுவனம் திட்ட அறிக்கையை தந்துள்ளதாகவும் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | அரசியலில் எது நடந்தாலும் இது மட்டும் கண்டிப்பாக நடக்காது - ஜெயக்குமார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ