DMK MP Dayanidhi Maran Campaigns in Central Chennai: மதச்சார்பற்ற இந்தியா கூட்டணியின் மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் தயாநிதி மாறன் அவர்களை ஆதரித்து மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட துறைமுகம் மேற்குப் பகுதியில் சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் , இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் ஆகியோர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியின் கழக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து, மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட துறைமுகம் மேற்குப் பகுதியில் வட்டம் 59 செம்பட வினாயகர் கோயில் தங்க சாலை தெருவில் துவங்கி தங்கசாலை தெரு ராசப்ப செட்டி தெரு,வால்டாக்ஸ் ரோடு அம்மன் கோவில் தெரு, வட்டம் 57 அண்ணாபிள்ளை தெரு, பள்ளியப்பன் தெரு, அய்யா முதலி தெரு, அண்ணா தெரு, திரிவேலியன் பேசின் ரோடு,ஜெனரல் முத்தைய்யா தெரு, பின்னர் 54 ஆ வட்டம் தங்கசாலை தெரு TTV ஸ்கூல், தங்கசாலை தெரு, முல்லா சாயபு தெரு,நம்புலியர் தெரு, அம்மன் கோவில் தெரு அக்ரஹாரம், வெங்கட்ராமன், வழியாக 54 வது வட்டம் தங்க சாலை தெருவில் நிறைவடைந்தது.
வீடு வீடாக வாக்குகளை சேகரித்த தயாநிதி மாறன்
இப்பிரச்சாரத்தில் மாவட்ட கழக, பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள், பாக முகவர்கள், BLC உறுப்பினர்கள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்கள், கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். பிரச்சாரத்தின் போது வழியெங்கிலும் மேளம் தாளம் முழங்க திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். வீடு வீடாக வாக்குகளை சேகரிக்க சென்ற திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் அவர்களுக்கு ஒவ்வொரு இடங்களிலும் மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் படிக்க | தேமுதிக வங்கி கணக்குகளை முடக்கி விடுவதாக பாஜக அச்சுறுத்தியது - பிரேமலதா விஜயகாந்த்
பாஜகவினால் ஒரு எம்பி சீட்டை கூட வெல்ல முடியாது
குறிப்பாக அப்பகுதிகளில் அதிக அளவில் ஜெயின் மக்கள் வசித்து வரும் நிலையில் அனைவரின் ஆதரவுடன் மத்தி சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அமைச்சர் சேகர் பாபுவை உற்சாகமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாட்கள் அல்ல நான்கு வருடங்கள் தமிழ்நாட்டிலேயே தங்கி பிரச்சாரம் மேற்கொண்டாலும் ஒரு எம்பி சீட்டை கூட அவர்களால் வெல்ல முடியாது என்றார்.
புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு என்ன செய்தார் தமிழிசை
நம்முடைய தமிழக முதலமைச்சருக்கு இருக்கும் ஆதரவு தற்போது பெருகிக்கொண்டே செல்கிறது. நாங்கள் தமிழகத்தில் பிறந்தவர்கள் தமிழக மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருகிறோம், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என அண்ணாமலை அறிவுரை கொடுக்க தேவையில்லை. தமிழிசை சௌந்தர்ராஜன் இரண்டு மாநிலங்களில் ஆளுநராக இருந்து என்ன சாதித்தார், ஆளுநராக இருந்து அந்த பணி செய்யாமல் வேடிக்கையாக தமிழகத்தில் சுற்றிக் கொண்டிருந்தார் , உதயநிதி ஸ்டாலின் பல்வேறு சாதனைகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் தமிழிசை என்ன செய்துள்ளார், புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு என்ன செய்தார் எதுவும் செய்யாமல் அரசு செலவில் உற்சாகமாக அனுபவித்து வந்ததை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை.
வினோஜ் செல்வம் மீது விமர்சனம்
மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் அவர்களுக்கு அனுபவம் அதிகம் போல, அதனால் தான் எம்ஜிஆர் உடன் மோடியை ஒப்பிட்டு பேசி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருக்கும் போது அனைத்து உரிமைகளையும் பறி கொடுத்த காரணத்தினால் தமிழகம் பின்னடைவுக்கு செல்ல காரணமானது, நாங்கள் உரிமைத்தொகை வழங்கும்போது இதை கூறவில்லை தேர்தல் காலங்களில் ஏன் இதை கூற வேண்டும். அனைத்தும் தேர்தல் பயம் காரணமே.
அன்புமணி ராமதாஸ் மீது விமர்சனம்
அன்புமணி ராமதாஸ் மீது நான் நல்ல மரியாதை கொண்டவன், நல்ல மனிதர் அவர், ஆனால் தேர்தல் காலங்களில் அவரது நிலையினை மாற்றி தந்தைக்கு கூட்டணியில் இருந்த கட்சியுடன் சண்டை என தன் நிலையை மாற்றி மாற்றி பேசுகிறார். சூட்கேஸ்களை தூக்கி தூக்கி மக்கள் பிரச்சனையை மறந்தவர்தான் அன்புமணி ராமதாஸ் என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ