Madras HC: திருமாவளவன் மீது புகார் கொடுத்ததால் போலீஸ் பாதுகாப்பு தேவையா?

VCK VS RSS: விசிக தலைவர் திருமாவளவன் மீது புகார் அளித்ததால் போலீஸ் பாதுகாப்பு கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அளித்த மனுவை பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 4, 2023, 08:43 PM IST
  • விசிக தலைவர் திருமாவளவன் மீது புகார் அளித்ததால் போலீஸ் பாதுகாப்பு தேவை
  • ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மனு
  • பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Madras HC: திருமாவளவன் மீது புகார் கொடுத்ததால் போலீஸ் பாதுகாப்பு தேவையா? title=

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது புகார் அளித்ததால் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறி, போலீஸ் பாதுகாப்ப கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அளித்த மனுவை பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். சட்டப் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான மதுரையை சேர்ந்த பி.ராமசாமி இது தொடர்பாக மனு அளித்தார்.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மதத்திற்கு எதிரான அவதூறு கருத்துகளை தெரிவித்து, நாட்டில் ஒற்றுமையின்மையையும், கலவரத்தையும் தூண்டுவதாக, சிதம்பரம் தொகுதி எம்.பி.-யும், விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக திருமாவளவன் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடர்ப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் அபாயம் இருப்பதால் பாதுகாப்பு வழங்கக் கோரி, ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மேலும் படிக்க | Budget Allocation: பட்ஜட்டில் நிதி ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சை! விளக்கமளிக்கும் மத்திய அமைச்சர்

அதில், விருதுநகர் மாவட்டம் அய்யம்பதி அருகே விசிக கொடிகளை வைத்திருந்த சிலர் தனது கார் மீது இரும்பு கம்பிகள் மற்றும் முட்டைகளை கொண்டு தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சாலைகிராமம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்படுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக தன் மீதும், குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடந்துள்ளதால் காவல்துறை பாதுகாப்பு கோரி சென்னை அண்ணா நகர் உதவி ஆணையாளர் மற்றும் ஜெ.ஜெ. நகர் காவல் நிலைய ஆய்வாளரிடம் அளித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் விண்ணப்பம் காவல்துறையின் பாதுகாப்பு குழுவில் முன்வைக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவுசெய்த நீதிபதி, மனுவை முறையாக பரிசீலித்து 4 வாரங்களில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | Super Cows: சீனாவின் ‘பால் புரட்சி’! கறவை மாடுகளை க்ளோனிங் செய்யும் சீன தொழில்நுட்பம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News