ஊட்டிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகையையொட்டி கோடை சீசன் களைகட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்த நிலையில், குன்னூரில் தனியார் ஹோட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட சாசில் புழுக்கள் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சுற்றுலா பயணிகள் அளித்த புகாரின்பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தை ஆய்வு செய்தனர்.
நீலகிரியில் கோடை சீசன்
நீலகிரியில் கோடை சீசன் தொடங்கிவிட்டதால் சுற்றுப் பயணிகள் குவிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு 10 லட்சம் பேர் ஊட்டிக்கு வருகை தந்த நிலையில் இந்த ஆண்டும் நீலகிரிக்கு கூட்டம் களைகட்டுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனையொட்டி, மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான மலர் கண்காட்சி, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்குகிறது. அன்று தொடங்கி 22-ந் தேதி வரை 6 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
மேலும் படிக்க | 10th Exam Result: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?
ஊட்டியில் போக்குவரத்து மாற்றம்
கடந்த ஒரு வாரமாக தினமும் 15 ஆயிரம் வாகனங்கள் ஊட்டிக்கு வருகின்றன. இதனால் ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம், ஊட்டி நகர் உள்பட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கோவையிலிருந்து, உதகைக்கு வரும் அனைத்து வாகனங்களும் குன்னூர் வழியாக வர வேண்டும் எனவும், உதகையிலிருந்து, கோவை, ஈரோடு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் கோகத்கிரி வழியாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மே 1 ஆம் தேதி வரை இந்த போக்குவரத்து மாற்றம் இருக்கும்.
தனியார் ஹோட்டல் சாசில் புழுக்கள்
இதனையொட்டி, நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு நேற்று சென்னையில் இருந்து சுற்றுலா பயணிகள் மூன்று பேர் குன்னூர் சுற்றுலா வந்துள்ளனர். சிம்ஸ் பூங்கா அருகே உள்ள தனியார் ஹோட்டலில் உணவு சாப்பிடும் பொழுது அங்கே வைத்திருந்த சாஸ்ஸை புழு மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே சர்வே செய்தவரை அழைத்து கேட்டால் சரியான பதில் அளிக்காமல், எனக்கு தெரியாது என்று அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.
இதனால் அவர்கள் ஹேரட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது, வாக்குவாதம் செய்த நிலையில் சுற்றுலா பயணிகள் மீடியாவுக்கு செல்வதாக கூறியுள்ளனர். உடனே, மீடியாவுக்கு சொல்ல வேண்டாம் என்று மேனேஜர் கெஞ்சியுள்ளார். இருப்பினும் இது குறித்து உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த ஹோட்டலுக்கு வந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.
மேலும் படிக்க | மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கு! நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ