’சித்தியுடன் நெருக்கம்’ தட்டிகேட்ட அத்தை கொலை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னையில் திருமணத்துக்குப் பிறகு வேறொரு பெண்ணுடன் நெருங்கிப் பழகியதை தட்டிக் கேட்ட அத்தையை கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 9, 2023, 04:34 PM IST
  • அத்தயை கொலை செய்த இளைஞர்
  • சித்தியுடன் தொடர்பை கண்டித்துள்ளார்
  • ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
’சித்தியுடன் நெருக்கம்’ தட்டிகேட்ட அத்தை கொலை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு title=

சென்னையை அடுத்த புழல் விநாயகபுரம் பரிமளம் நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரின் மனைவி குணசுந்தரி (37). இவர் கொளத்தூர் பாலாஜி நகர், முதல் பிரதான சாலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். அப்போது, குணசுந்தரியின் சடலத்தைக் கைப்பற்றிய கொளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேலன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். அப்போது, அவருடைய உறவுக்காரரான கணேசன் என்ற இளைஞர் தலைமறைவானார். இதனால் அவர் மீது காவல்துறைக்கு சந்தேகம் எழுந்தது. 

அந்த கணேசன் யார் என்றால்? குணசுந்தரியின் அண்ணன் மகன். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணேசனை விட்டு அவரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். தனியாக வசித்த கணேசனுக்கும் குணசுந்தரியின் சகோதரர் ஒருவரின் மனைவிக்கும் (சித்தி முறை) நட்பு ஏற்பட்டுள்ளது. குணசுந்தரியின் சகோதரனும் இறந்துவிட்டார். அதனால், கைக்குழந்தையுடன் தவித்த குணசுந்தரியின் சகோதரரின் மனைவியும் கணேசனும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இந்தத் தகவல் குடும்பத்தினருக்குத் தெரிந்ததும் அனைவரும் கண்டித்துள்ளனர்.

மேலும் படிக்க | சிகப்பாக குழந்தை பிறந்ததால் மனைவி சித்திரவதை செய்யப்பட்டு கொலை

குணசுந்தரி, கணேசனிடம், `நீ ஏன் இப்படி நடந்துகொள்கிறாய். உன்னால் நம் குடும்பத்துக்குக் கெட்ட பெயர் ஏற்படுகிறது?' என்று கண்டித்துள்ளார். சித்தியுடன் நெருக்கமாகப் பழகாதே' என்றும் கூறியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த கணேசன், தன்னுடைய அத்தையான குணசுந்தரியைக் காய்கறிகளை வெட்டப் பயன்படுத்தும் கத்தியால் குத்தியுள்ளார். அதை குணசுந்தரி தடுத்தபோது அவரின் கையிலும் வெட்டு விழுந்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த தாக்குதலால் ரத்த வெள்ளத்தில் குணசுந்தரி உயிரிழந்தார். இதையடுத்து கணேசன் தலைமறைவாகிவிட்டார்.

பின்னர் கணேசனை கைது செய்த காவல்துறை கொலை குறித்து விசாரித்து அது குறித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்தது. இந்த வழக்கு அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி T.H.முகமது பாரூக் விசாரித்தார். இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய நீதிபதி, அத்தை ஞானசுந்தரியை, கணேஷ் கொலை செய்ததை காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்.  மேலும், கணேஷுக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் படிக்க | அடுத்து இந்த திமுக அமைச்சரின் வீட்டில் அமலாக்கதுறை சோதனை? வெளியான தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News