லேட் மேரேஜ் செய்யும் இளைஞர்களே கவனம்... பல ஆண்களுக்கு டிமிக்கி கொடுத்த பெண்

Tamil Nadu Crime Latest News Updates: செல்போன் செயலி மூலம் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு பலருடன் திருமண உறவில் இருந்து லட்சக்கணக்கில் மோசடி செய்து ஒரு பெண்மணி தப்பிச் சென்றுள்ளார். தற்போது அந்த பெண்மணி குறித்த பல திடுக் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sudharsan G | Last Updated : Jul 15, 2024, 12:10 PM IST
  • இதுவரை அந்த பெண் காவலர் உள்பட பலரையும் ஏமாற்றியுள்ளார்.
  • திருமணம் செய்து மனைவியாக வாழ்ந்துவிட்டு அதன்பின்னரே தலைமறைவாகிறார்.
  • இதனால், பலரும் இவர் மீது புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.
லேட் மேரேஜ் செய்யும் இளைஞர்களே கவனம்... பல ஆண்களுக்கு டிமிக்கி கொடுத்த பெண் title=

Tamil Nadu Crime Latest News Updates: திருமணத்திற்கு பெண் தேடுவது என்பது இப்போது குதிரைக்கொம்பாகிவிட்டது என உங்கள் வீட்டின் பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். பெற்றோர், உறவினர் தங்கள் சுற்றத்தில், தெரிந்தவர்கள் மத்தியில் மகனுக்கு வரன் பார்க்கும்போது, அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்று பெண் கிடைப்பது அரிதாகிவிட்டது. இப்போதெல்லாம் ஆண்கள் லேட் மேரேஜ் செய்யும் போக்கு நம்மால் அதிகம் பார்க்க முடிவதும் இதனால்தான். 

காதல் திருமணம் செய்யாத அதிகமானோர் வீட்டில் பெற்றோர் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும் என்பதால் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதுள்ளது என தங்களின் மன வருத்தத்தை வெளிப்படுத்துகின்றனர். இந்த விஷயத்தை சில மோசடிப் பேர்வழிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றனர். மோசடிகளுக்கு பின்னணியில் திருமண இடைத்தரகர்கள் என்ற பெயரிலும் சில சுற்றி வருகிறார்கள்.

மேட்ரிமோனி மூலம் மோசடி

இதுபோன்ற இளைஞர்களை திருமணம் செய்து அவர்களிடம் நகை, பணம் ஆகியவற்றை திருடிவிட்டு அங்கிருந்த தலைமறைவாவதை ஒரு பெண் தொடர்ந்து செய்து வந்துள்ளார். இப்போது போலீசிடம் சிக்கியிருக்கும் அந்த பெண் குறித்தும், அவர் செய்த மோசடிகள் குறித்து இதில் விரிவாக காணலாம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் ரவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ரவி வீட்டில் அவருக்கு பல மாதங்களாக திருமணத்திற்கு பெண் தேடி வந்துள்ளனர். இந்த சமயத்தில், அதாவது கடந்த 6 மாதங்களுக்கு முன் செல்போன் மேட்ரிமோனி செயலி மூலம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சந்தியா (30) என்பவர் ரவிக்கு அறிமுகமாகி உள்ளார். செயலியில் ஏற்பட்ட பழக்கத்தை தொடர்ந்து, இருவரும் பரஸ்பரம் மொபைல் நம்பர்களை பரிமாறிக்கொண்டு வாட்ஸ் ஆஃப் மூலம் தங்களின் காதலை வளர்த்துள்ளனர். 

மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங்கின் உடல் நல்லடக்கம்; புத்த மத வழக்கப்படி இறுதி மரியாதை

சந்தியா போட்ட ஸ்கெட்ச்...

சில நாள்களிலேயே சந்தியா அவரது வேலையை தொடங்கியுள்ளார் எனலாம். குறிப்பாக தனக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக தமிழ்ச்செல்வி என்ற இடைத்தரகர் வரன் தேடிக் கொண்டிருப்பதாக சந்தியா தெரிவித்திருக்கிறார். தமிழ்ச்செல்வியையும் ரவிக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். 

இருவருக்கும் நன்கு பழக்கம் ஏற்பட்ட சூழலில், தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனவும் வீட்டில் அவசர அவசரமாக திருமண ஏற்பாடு செய்கிறார்கள் என்றும் கூறி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு ரவியை சந்தியா வற்புறுத்தி உள்ளார். இதையடுத்து, தமிழ்ச்செல்வி தலைமையில் ரவிக்கும், சந்தியாவுக்கும் கடந்த ஜூன் மாதம் பழநி அருகே உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ஆதார் கார்டில் சிக்கிய சந்தியா
 
இந்த திருமணத்தை ரவியின் பெற்றோரும் ஏற்றுக் கொண்டனர். ரவியின் பெற்றோர் தங்கள் மருமகள் என கருதி 12 பவுன் நகையையும் சந்தியாவுக்கு வாங்கிக் கொடுத்துள்ளனர். திருமணாகி சில நாள்களே ஆன நிலையில், சந்தியாவின் நடவடிக்கையில் ரவிக்கு சந்தேகம் வந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் சந்தியாவின் ஆதார் அட்டையை தேடி அதை பார்த்தபோது தான் அவர் தலையில் இடியே விழுந்துள்ளது. 

அதில், கணவர் பெயர் என்ற இடத்தில் சென்னையைச் சேர்ந்த வேறு ஒருவரின் பெயர் இருந்ததும், சந்தியாவின் சொன்னதை விட அதிகமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி சந்தியாவிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது, வாக்குவாதம் முற்றி கோபமடைந்த சந்தியா, ரவியையும் அவரது குடும்பத்தையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் உஷாரான ரவி சந்தியாவிடம் பிரச்னையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என சமாதானமாக பேசி ஒருவழியாக தாராபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

விசராணையில் திடுக் தகவல்கள்

காவல் நிலையத்தில் போலீசார் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே சந்தியா அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, போலீஸார் சந்தியாவின் பின்னணி குறித்து விசாரிக்க தொடங்கினர். இதில்தான் அதிர்ச்சிகர தகவலகள் வர தொடங்கின. சந்தியாவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் முடிந்ததும், அவர்களுக்கு இடையே ஒரு குழந்தையும் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

பலரையும் ஏமாற்றியதாக புகார்

30 முதல் 40 வயதான திருமணம் ஆகாத ஆண்களைக் குறிவைத்து சந்தியா இந்த தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்தையும், அதற்கு இடைதரகர் போல் தமிழ்செல்வி என்பவரும் உடந்தையாக இருக்கிறார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. சென்னையை சேர்ந்த கணவன், ரவி மட்டுமின்றி காவல் உதவி ஆய்வாளர், மதுரையில் ஒரு காவலர், ஈரோடு கொடுமுடியில் ஒரு இளைஞர் என பலருடன் திருமண உறவில் இருந்துள்ளார் சந்தியா. இதில் ரவி உள்பட பலரையும் ஏமாற்றி பணம், நகைகளை எடுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். பலரும் இதுகுறித்து புகார் அளிக்காமல் இருந்ததால் இதுநாள் வரை சிக்காமல் இருந்துள்ளார்.

30 முதல் 40 வயதான திருமணம் ஆகாதவர்களை குறித்துவைத்து திருமணம் செய்து, திருமண உறவில் மனைவியாக சில மாதங்கள் வாழ்ந்துவிட்டு வேண்டுமென்றே தகராறில் ஈடுபட்டு நகை மற்றும் பணத்துடன் சந்தியா தலைமறைவாகிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதுபோன்று பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தையும் பறித்துள்ளார் என கூறப்படுகிறது. இதற்கு தமிழ்ச்செல்வி உடைந்தாயாக இருந்ததும் தெரியவந்தது.

மேலும் படிக்க | சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி இடமாற்றம்... புதிய சென்னை கமிஷனர் நியமனம் - 3 முக்கிய மாற்றங்கள்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News