DMK District Secretary Meeting: திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்தது. திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல் நிகழ்வாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய 40க்கு 40 வெற்றி எப்படி சாத்தியமானது வியூகம் என்ன என்பதை ஆவணப்படுத்தும் ‘தென் திசையின் தீர்ப்பு’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட பொருளாளர் டி.ஆர்.பாலு பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அடுத்த நிகழ்வாக மாவட்ட செயலாளர் கூட்டத்தின் பின்வரும் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.
மூன்று தீர்மானங்கள் என்னென்ன?
- கடந்த 10 தேர்தல்களில் வெற்றியைத் தேடித்தந்த திமுக தலைவருக்கு வாழ்த்துகள் - திமுக நிர்வாகிகள், வாக்காளர்களுக்கு நன்றி.
- வரும் செப். 17ஆம் தேதி அன்று திமுக தொடங்கப்பட்டதை முன்னிட்டு, சென்னையில் முப்பெரும் விழா கூட்டம் - தமிழ்நாடு முழுவதும் சுவர் விளம்பரங்கள், தெருமுனைக் கூட்டங்கள், கொடிக்கம்பங்கள் புதுப்பிப்பு.
- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நாணயம் - ஒன்றிய அரசுக்கு நன்றி. அதே சமயம் நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டுக்கு வஞ்சனை காட்டும் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம்.
தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்ட தீர்மானங்கள் - 16.8.2024
தீர்மானம் : 1
நாற்பதுக்கு நாற்பது வென்ற தொடர் வெற்றி நாயகர் நம் கழகத் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அரை நூற்றாண்டு காலம் தலைமை தாங்கி நடத்திய திராவிட முன்னேற்றக் கழகம் எனும்… pic.twitter.com/TdUzjJIGdN
— DMK (@arivalayam) August 16, 2024
மேலும் படிக்க | கிசுகிசு : நடிகரின் மாநாட்டுக்கு தொல்லை கொடுத்த 2 கேபினட்டுகள்..!
200 தொகுதிகள் இலக்கு?
இதனைத் தொடர்ந்து, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் உரையாற்றினார். அதில்,"நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 வெற்றிக்கு உழைத்த நிர்வாகிகள், வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி. கடந்த 10 தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். சுணக்கமின்றி செயல்பட்டால் அடுத்த முறையும் திமுக ஆட்சிதான்.
200 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் இலக்கு. அந்தளவுக்கு நலத்திட்டங்களை மக்களுக்கு அளித்திருக்கிறோம். நலத்திட்ட பயனாளிகளை வாக்குகளாக மாற்ற களப்பணி அவசியம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை மாவட்ட செயலாளர்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
புகார்கள் மீது விசாரணை
சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் வந்திருக்கின்றன. நிர்வாகிகள் குறித்தும் புகார்கள் உள்ளன. அனைத்து புகார்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படும். சார்பு அணிகளை மாவட்டச் செயலாளர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அனைத்து பூத் கமிட்டிகளையும் செம்மைப்படுத்த வேண்டும்.
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரை!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் இன்று (16.8.2024), காலை, சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்ற “தி.மு.க. மாவட்டக் கழகச்… pic.twitter.com/Oz257PBgML
— DMK (@arivalayam) August 16, 2024
உழைப்பின் அடிப்படையில் உயர்வு
திமுகவின் அனைத்து அமைப்புகளிலும் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு முன்பாக பொது உறுப்பினர் கூட்டம் நடத்தப்பட வேண்டும். மினிட் புத்தகம் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். உங்கள் உழைப்பின் அடிப்படையிலேயே உங்களுக்கான உயர்வு இருக்கும். கட்சியின் அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்பவரே மாவட்ட செயலாளர், அதில் வெற்றி பெறுபவரே வேட்பாளர்.
அமைச்சர்களும் திமுகவின் அடிமட்டத் தொண்டர்களுக்கு உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும். முதலீட்டுகளை ஈர்க்க அமெரிக்காவில் இருந்தாலும் கட்சியையும் அரசையும் நிர்வகித்து, கவனித்துக் கொண்டிருப்பேன். கலைஞர் 100 நாணயம் வெளியீட்டில் நிச்சயம் திமுகவினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். திமுக அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க அர்ப்பணிப்போடு செயல்படுங்கள். கவுன்சிலர்கள் யாராவது தவறு செய்தால் அவர்கள் மீது பதவிப்பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைளை உடனடியாக எடுக்க வேண்டும்" என்றார். முதலமைச்சரின் மேடையில் எச்சரிக்கை விடுத்திருப்பது நிர்வாகிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் படிக்க | கிசுகிசு : முதன்மையானவர் கொடுத்த எச்சரிக்கை - கலகத்தில் கேபினட்டுகள்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ