குழித்துறை அருகே கழுவன்திட்டை காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெபஷைன். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே சுற்றுலா தலமான வர்க்கலையில் ரிசோர்ட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி விஜி (27), குழந்தை 2 வயதான பிரியா மற்றும் பெயரிட்டபடாத 6 மாத பெண் குழந்தையும் உண்டு.
ALSO READ | வார்டன் தொல்லையா? மதமாற்றமா? லாவண்யாவின் புதிய வீடியோ
இந்த நிலையில் விஜியின் தாயார் தேவாலயத்துக்கு சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை மாலையில் வீட்டுக்கு வந்த போது வீட்டருகேயுள்ள தண்ணீர் தொட்டியில் 2 குழந்தைகளும் நீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்துள்ளது. வீட்டினுள் சென்று பார்த்தபோது அவரது மருமகள் விஜி தூக்கில் தொங்கி இறந்த நிலையில் காணப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சத்தமிட்டதையடுத்து அப்பகுதியினர் அங்கு வந்தனர்.
இது குறித்து மார்த்தாண்டம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தக்கலை டிஎஸ்பி கணேசன் அப்பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ALSO READ | பள்ளி சிறுமி தற்கொலை; கட்டாய மத மாற்றம் காரணமா? போலீஸ் விசாரணை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR