பரபரக்கும் நீலகிரி தொகுதி - அதிமுகவுக்கு திமுக பகிரங்க சவால்..!

Nilgiris constituency: நீலகிரி தொகுதியில் திமுகவை விட அதிமுக ஒரே ஒரு வாக்கு வாங்கினால் கூட அரசியலை விட்டே விலக தயார் என திமுக மாவட்ட செயலாளர் சவால் விடுத்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 5, 2024, 10:16 AM IST
  • சூடுபிடித்த நீலகிரி தொகுதி பிரச்சாரம்
  • திமுக மாவட்ட செயலாளர் பகிரங்க சவால்
  • செங்கோட்டையன் ரெடியா என கேள்வி
பரபரக்கும் நீலகிரி தொகுதி - அதிமுகவுக்கு திமுக பகிரங்க சவால்..! title=

நீலகிரி தொகுதி யார் போட்டி?

நீலகிரி தொகுதியில் திமுக எம்பி ஆ.ராசா கடந்த முறை வெற்றி பெற்று எம்பியாக உள்ளார். திமுகவின் துணைப் பொதுச்செயலாளராகவும் இருக்கும் அவரே இம்முறையும் இந்த தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட உள்ளார். இதனால் நீலகிரி தொகுதியில் முகாமிட்டிருக்கும் அவர், அத்தொகுதியில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் கோரிக்கைகளை மக்களிடம் நேரடியாக சென்று கேட்பதுடன், அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்று நிறைவேற்றி கொடுத்துக் கொண்டிருக்கிறார். ராசா போட்டியிடுவது உறுதியாக தெரியும் நிலையில் அவரை எதிர்த்து களமிறங்கும் வேட்பாளர் யார்? என்பது இன்னும் உறுதியாகவில்லை. 

மேலும் படிக்க | மாணவிகள், ஆசிரியைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி முதல்வரை கைது செய்யக்கோரி போராட்டம்

மும்முனை போட்டி

நீலகிரி தொகுதியில் இம்முறை மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக  கூட்டணியில் இருந்து அதிமுக பிரிந்து வந்துவிட்டதால், நீலகிரி தொகுதியில் அதிமுக நேரடியாக வேட்பாளரை களமிறக்க இருக்கிறது. அதேபோல் பாஜகவும் அத்தொகுதியை குறி வைத்திருக்கிறது. மத்திய  இணையமைச்சர் முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். ஆனால், அதிமுக கூட்டணியில் இல்லை என்பதை அறிந்தவுடன் கடந்த முறை போலவே இம்முறையும் மாநிலங்களவை உறுப்பினராக சென்றுவிட்டார். அதனால், அதிமுக மற்றும் பாஜக சார்பில் நீலகிரி தொகுதியில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டால் மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக மாவட்ட செயலாளர் சவால்

இந்த சூழலில் திமுக மாவட்ட செயலாளர் அதிமுகவுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். அதில், நீலகிரி தொகுதியில் திமுகவை விட அதிமுக ஒரே ஒரு தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றால் கூட தான் அரசியலை விட்டே விலக தயார் என அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் திமுக சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் கலந்து கொண்டு பேசினார். 

அவர் பேசும்போது, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீலகிரி மக்களவைத் தொகுதியில் ஆ.ராசா போட்டியிட்டால் டெபாசிட் வாங்க மாட்டார் என பேசி உள்ளார். நான் இப்போது சொல்கிறேன் நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுகவை விட அதிமுக ஒரு வாக்கு அதிகம் வாங்கினால் நான் மாவட்ட செயலாளர் பதவியை விட்டும் அரசியலையும் விட்டும் விலக தயார் என சவால் விட்டார். இதனால் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

மோடி சுட்ட வடை விநியோகம்

இதற்கிடையே பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது திமுக நிர்வாகிகள் மோடி முகமூடி அணிந்தபடி கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு வாயில வடை என எழுதப்பட்ட துண்டு பிரசுரங்கள் மற்றும் மெதுவடைகளை வழங்கி நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த பொதுக் கூட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

 

மேலும் படிக்க | பிரதமர் இந்த காரணத்திற்காக தான் தமிழகம் வருகிறார் - முதல்வர் ஸ்டாலின்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News