தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறையில், சாலை பராமரிப்புப் பணிகளில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!
உலக வங்கியின் வழிகாட்டுதலின்படி அனுபவமும், தொழில்நுட்ப ஆற்றலும் கொண்ட ஒப்பந்தகாரர்கள் மூலம் சாலைகள் பராமரிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. திறமையான அதிகாரிகளிடமே 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பராமரிப்பதற்கான ஒப்பந்த திட்டம் போடப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொள்ளாச்சி, இராமநாதபுரம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் விருதுநகர் கோட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் அரசுக்கு ரூ.527.73 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தில் பெருமளவு நிதிமுறைகேடு நடந்திருப்பதாக தகவல்கள் வெயாகி வருவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது எனவும், ரூ.2,083 கோடி வரை தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஒரு கற்பனை குற்றச்சாட்டு எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சாலை பராமரிப்பில் தொடர்புடைய ஒப்பந்தத்தில் அடங்கியிருக்கும் ஏராளமான பணிகளை கருத்தில்கொள்ளாமல், நிதிமுறைகேடு என உன்மைக்கு புறம்பான தகவல் தெரிவிக்கப்பட்டு வருகின்றது என அமைச்சர் ஜெயக்குமார் மறுப்புத் தெரிவித்துள்ளார்.