மதுரையில் பாலம் கட்டுமானப் பணி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மதுரையிலிருந்து செட்டிகுளம் வரையிலான 4வழி மேம்பாலம் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Last Updated : Aug 28, 2021, 08:59 PM IST
மதுரையில் பாலம் கட்டுமானப் பணி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!  title=

மதுரை நாராயணபுரத்தில் 7 கி.மீ., தொலைவிற்கு ரூ.679.98 கோடியில் தமிழகத்திலேயே மிக நீளமாக கட்டப்படும் பறக்கும் பாலம் கட்டுமானப்பணியில் 35 மீட்டர் நீளம் கொண்ட இணைப்புப் பாலம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில், உத்திரப் பிரதேச தொழிலாளர் ஒருவர் இடிபாடுகளில் சிக்கி பலியானார். மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

மதுரையிலிருந்து நத்தம் வரை மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 28 கி.மீ., தொலைவிற்கு ரூ.1,020 கோடியில் புதிதாக நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது.  நகர்ப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகே தல்லாக்குளத்தில் இருந்து ஊமச்சிக்குளம் அடுத்த செட்டிகுளம் வரை ரூ.7.3 கி.மீ., தொலைவிற்கு பிரம்மாண்ட பறக்கும் பாலம் ரூ.679.98 கோடியில் கட்டுமானப்பணி 2018ம் ஆண்டு தொடங்கியது.

இந்த பறக்கும் பாலத்தை தாங்கிப் பிடிக்கும் வகையில் வழிநெடுக 192 பிரமாண்ட தூண்கள் அமைக்கப்படுகிறது. மதுரையில் இருந்து நத்தம் வழியாக திருச்சி செல்வதற்கு போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், 20 கி.மீ., தொலைவு பயண தூரத்தைக் குறைக்கவும், இந்த பறக்கும் பாலமும், நான்கு வழிச்சாலையும் அமைக்கப்படுகிறது.  இந்த பறக்கும்பாலம் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போதே அதன் கீழ் ஒரு பகுதியில் நகரப்போக்குவரத்து எந்த சிக்கலும் இல்லாமலே சென்று கொண்டிருக்கிறது. அதில் டவுன் பஸ்கள், புறநகர் பஸ்கள், கார்கள், கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் வழக்கம்போல் சென்று கொண்டிருந்தன.

இன்று தொழில்நுட்பக் கோளாறால்  மாலை இரு தூன்களுக்கு இடைப்பட்ட 35 மீட்டர் நீளமுள்ள காங்கீரிட் கர்டர் கீழே சரிந்து விழுந்தது. இதில் பல நூறு டன் எடை கொண்ட அந்த காங்கீரிட் கர்டர் இரண்டாக பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. கான்க்கீரிட் கர்டர் இடிந்து விழுவதை முன்கூட்டியே கனித்த பாலத்திற்கு கீழே வேலைப்பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். துரதிஷ்டவசமாக சில தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அதில் ஒருவர் இறந்துவிட்டார்.

விபத்தின் முழுத்தன்மை குறித்தும் மாவட்ட ஆட்சியர் முழு விசாரணை மேற்றகொள்ள வேண்டும் என்று சு வெங்கடேசன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.  

accident

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQY

Trending News