கோவில் நகைகளை உருக்க தடைக்கோரி நீதிமன்றத்தில் மனு

தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 7, 2021, 06:37 PM IST
கோவில் நகைகளை உருக்க தடைக்கோரி நீதிமன்றத்தில் மனு title=

சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின்கீழ் உள்ள இந்து கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை உருக்கி தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி வங்கிகளில் முதலீடு செய்வதற்கு தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

10 வருடத்திற்கு பிறகு ஆட்சியை கைப்பற்றிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பல அதிரடி நடவடிக்கை மற்றும் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அதில் ஒன்று தான் கோவில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செயப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.  

இந்த அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரேசேர  எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 44,301 கோவில்கள் உள்ளன. அதிக வருவாய் ஈட்டக்கூடிய பெரிய கோவில்கள் எண்ணிக்கை சுமார் 50. முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள 47 கோவில்களில் பக்தர்கள் வழங்கிய சிறிய நகைகள் தங்க கட்டிகளாக மாற்றப்பட உள்ளன.

ALSO READ |  பல முக்கிய அறிவிப்புக்களை வெளியிட்ட அமைச்சர் மொட்டை அடிக்க இனி கட்டணம் கிடையாது

தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில்,  "இந்து சமய அறநிலைய சட்டத்தில், கோவிலுக்கு சொந்தமான நகைகளை உருக்க எந்த அனுமதியும் வழங்கவில்லை. அறநிலையத் துறை, கோவில் நிர்வாகத்தில் மட்டும் தலையிட முடியுமே தவிர மத வழிபாட்டு விவகாரங்களில்  தலையிட முடியாது.

வருவாய் ஈட்ட வேண்டும் என்றால், அதற்காக நகைகளை உருக்கி டெபாசிட் செய்யத் தேவையில்லை. ஆக்கிரமிப்பில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்களை மீட்டாலே வருவாய் ஈட்டலாம்.

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளை உருக்க அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் தமிழக அரசின் நடவடிக்கை இருப்பதால், கோயில் நகைகளை உருக்குவது தொடர்பான சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் மற்றும் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ |  தமிழ்க் கடவுள் முருகனுக்கு தமிழில் அர்ச்சனை பக்தர்கள் மகிழ்ச்சி.!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News