புது டெல்லி: பெட்ரோல் - டீசல் விலை படிப்படியாக குறைந்து இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த அளவை எட்டியுள்ளது. ஜனவரி 12 முதல் பெட்ரோல் விலை குறையத் தொடங்கியது. கடந்த 15 நாட்களில் பெட்ரோல் விலை 2 ரூபாய் 19 பைசா குறைந்துள்ளது. இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வீழ்ச்சியடைந்து அனைத்து நகரங்களிலும் பெட்ரோலின் சராசரி விலை 15 பைசாவும் டீசல் 25 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. சீனாவில் கரோனாவின் அழிவு காரணமாக, உலகில் கச்சா எண்ணெயின் விலை ஒரு வாரத்தில் 7 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் குறையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இருப்பினும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் வீழ்ச்சியடைவது நுகர்வு அடிப்படையில் பொருளாதாரத்திற்கு நல்லது.
கடந்த சில நாட்களில், கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு ஐந்து டாலருக்கும் அதிகமாக குறைந்துள்ளது. இன்றும், அதன் விலை டாலர் ஒன்றுக்கு 1.12 குறைந்து 59.57 டாலராக இருந்தது. இதன் காரணமாக உலகளவில் எரிபொருள் விலை குறையும் வாய்ப்பு உள்ளது.
உலகம் முழுவதும் வைரஸ் பரபரப்பை உருவாக்கியுள்ளதால் எரிபொருள் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. ஒரு வாரத்தில், உள்நாட்டு சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 1.25 ஆக குறைந்துள்ளது. 15 நாட்கள் பற்றி பேசும் போது, பெட்ரோல் இரண்டரை கால் ரூபாயால் மலிவாகிவிட்டது. முக்கிய நகரங்களில் எரிபொருள் விலை எவ்வளவு இருக்கிறது என்று பார்ப்போம்.
நகரம் | பெட்ரோல் | டீசல் |
டெல்லி | 73.71 (-0.15 பைசா) | 66.71 (-0.25 பைசா) |
சென்னை | 76.56 (-0.15 பைசா) | 70.47 (-0.26 பைசா) |
மும்பை | 79.32 (-0.15 பைசா) | 69.93 (-0.26 பைசா) |
கொல்கத்தா | 76.33 (-0.15 பைசா) | 69.07 (-0.25 பைசா) |
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.