கோவை மருதமலை பகுதியில் யானை சாணத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டடது வன உயிரின ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்கள் ஏராளமான யானைகளின் வாழ்விடமாக உள்ளது. உணவு மற்றும் தண்ணீர் தேடிச் செல்லும் யானைகள் அடிக்கடி வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.
உணவுக்காக வனத்தை விட்டு வெளியே வரும் யானைகள், குப்பை மேடுகளில் கொட்டப்படும் காய்கறிக் கழிவுகளை உட்கொள்கின்றன. அப்போது பிளாஸ்டிக் (Plastic) கவர்களையும் சேர்த்து உட்கொள்வதால் யானைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதோடு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் மருதமலை மலைக்கோயிலுக்கு செல்லும் பாதையில் கிடந்த யானை சாணத்தை வன உயிரின ஆர்வலரான முருகானந்தம் என்பவர் ஆய்வு செய்தபோது அதில், பிளாஸ்டிக் கவர்கள், முகக் கவசம், நாப்கின் ஆகியவை இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கூறிய முருகானந்தம், "மருதமலைக்கு அருகிலுள்ள சோமயம்பாளையம் கிராமத்தில் எங்களது எதிர்ப்பை மீறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறை தரப்பிலிருந்தும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பகுதியில் இருந்து குப்பை கிடங்கை அகற்ற முடியவில்லை. வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் 5 யானைகள் இந்த குப்பை மேடு உள்ள பகுதிக்கு அவ்வப்போது வருகின்றன. இங்கு யானைகள் வரும்போது அவற்றை கண்காணித்து அங்கிருந்து விரட்டி வருகிறோம். தொடர்ச்சியாக யானைகள் பிளாஸ்டிக்கை உட்கொள்ளும் போது அவை உயிரிழக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனை துறை சார்ந்த அதிகாரிகள் கவனத்தில் கொண்டு யானைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.
மருதமலை : யானை வயிற்றில் பால் கவர், சானிட்டரி நாப்கின், முகக்கவசம் இருப்பதால் வன ஆர்வலர்கள் அதிர்ச்சி.
அருகில் இருக்கும் குப்பை மேட்டை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை.
|| #ZeeTamilNews | #Elephant || pic.twitter.com/g5iyzwRFuV
— Zee Tamil News (@ZeeTamilNews) January 10, 2022
ALSO READ | பசுவின் வயிற்றிலிருந்து 77 கிலோ பிளாஸ்டிக்கை நீக்கிய மருத்துவர்கள்!
யானைகள் மிக அற்புதமான, விசித்திரமான விலங்குகள். இவை மனித குலத்துக்கு செய்யும் நன்மையும் ஏராளம். யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என நம் முன்னோர்கள் கூறியுள்ளதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. யானைகளைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை இங்கே காணலாம்.
01. யானை 22 மாதங்கள் கருவை சுமக்கும்.
02. யானை 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும்.
03. அதன் தும்பிக்கையால் 350 கிலோ எடையை தூக்க முடியும்.
04. யானைகள் நேரங்களில் இரண்டு குட்டிகளும் போடுவதுண்டு.
05. ஒரு யானை ஒரு காட்டையே உருவாக்கும்.
06. யானை ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும் .
07. யானை ஒரு நாளைக்கு 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.
08. 250 கிலோ உணவில் 10% விதைகள் இருக்கும். சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகள் காட்டில் விதைக்கப்படும்.
09. யானை ஒரு நாளைக்கு 300 - 500 விதைகள் விதைக்கும்.
10. யானை ஒரு நாளில் 100 மரங்களை நடுகிறது. ஒரு வருடத்திற்கு 36,500 மரங்கள் நடுகிறது.
11. ஒரு யானை தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 அயிரம் மரம் வளர காரணமாகிறது.
அடுத்த முறை நீங்களும், நானும் யானையை (Elephant ) பார்க்கும் பொழுது நம் மனதில் தோன்றக் கூடிய ஒரே காட்சி, நாம் பார்க்கும் இந்த காடுகள் மற்றும் இயற்கை வளம் இந்த ஜீவனால் உருவானது என்பதே!
5 கிமீ தூரத்தில் தண்ணீர் இருந்தாலும் அதனை வாசனை மூலம் தெரிந்து கொள்ளும் திறன் கொண்டவை யானைகள்.
இத்தனை அரிய குணங்களும், மனித குலத்துக்கு தன்னை அறியாமல் உதவும் பண்பும் கொண்ட யானைகளுக்கு நம்மால் செய்ய முடிந்தது ஏதேனும் உண்டென்றால், அது பிளாஸ்டிக் பைகளை அவை உண்ணக்கூடிய இடங்களில் போடாமல் இருப்பதுதான். நம்மால் ஒரு யானைக்கு உயிர் கொடுக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. அந்த நிலையில், அதன் உயிரை எடுக்கும் உரிமையும் நம்மிடம் இல்லை என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
ALSO READ | Viral Video: இது எங்க ஏரியா! உள்ள வராத! மிரட்டும் யானை! திகிலில் பயணிகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR