பொங்கல் பண்டிகை இன்னும் மூன்று வாரத்தில் வரவுள்ளது. அதற்காக மக்கள் இப்போது இருந்தே தயாராகி வருகின்றனர். தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். தீபாவளியை காட்டிலும் பொங்கல் பண்டிகை தமிழகத்திற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அந்த தினத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்தும், மாட்டுப் பொங்கல் தினத்தில் மாடுகளை வழிபட்டும் கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பிலும் மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
மேலும் படிக்க | போக்குவரத்து ஊழியர்களுக்கு Good News.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மூன்று சிறப்பு பொருட்கள் இடம் பெற உள்ளன. இது குறித்த கூடுதல் விவரங்களை தமிழக அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தொகுப்பில் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் பொங்கல் கொண்டாட தேவையான பணம் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் ரேஷன் கடைகளில் சிறப்பு பொருட்கள் கொண்ட பொங்கல் பேக்கேஜ்கள் வழங்கப்பட உள்ளது. இந்த பேக்கேஜ்களில் அரிசி, சர்க்கரை மற்றும் பிற உணவு பொருட்கள் உட்பட 15க்கும் மேற்பட்ட பொருட்கள் இடம் பெற உள்ளன.
உணவு பொருட்கள் தவிர மக்களுக்கு ரூ. 1000 பணமும் வழங்கப்பட உள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு பொங்கல் தொகுப்பில் இந்த பணம் வழங்கப்படுகிறது. அதற்கு முன்பு வரை, பணம் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பொங்கல் பரிசுடன், மகளிர் உரிமையும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 1000 ரூபாய்க்கு பதிலாக 2000 ரூபாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த முறை பொங்கல் பரிசில் சேர்த்து வழங்கப்படும் என்பதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் இல்லை.
அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த புடவை மற்றும் வேட்டிகளை வழங்க டெண்டர்கள் விடப்பட்டு அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. இந்த பொருட்கள் விரைவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு, பொங்கல் பரிசுகள் வழங்கப்படும் நேரம் வரும்போது, மற்ற பரிசுகளுடன் சேர்த்து இவையும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. மகளிர் உரிமை தொகை ஒவ்வொரு மாதமும், 15 ஆம் தேதி வழங்கப்படுகிறது. இந்த முறை பொங்கல் பண்டிகை வருவதால் 10ம் தேதிக்கு முன்பே பணம் கிடைக்கும் படி தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனால் பொங்கல் பரிசாக ரூ.1000, மகளிர் உரிமை தொகை, பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலைகள் கிடைக்க உள்ளது.
மேலும் படிக்க | பொங்கல் பரிசில் என்ன என்ன பொருட்கள் இடம் பெரும்? ராதாகிருஷ்ணன் IAS விளக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ