கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் தங்கத்தின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து உள்ளது!
இதற்கு மிக முக்கிய காரணம், இந்திய மக்களுக்குத் தங்கத்தின் மீதான மோகம் தொடர்ந்து அதிகரித்து வருவது தான் என கூறப்படுகிறது.
நடப்பு ஆண்டின் தொடக்கத்திலிருந்தே 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில்தான் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதி தங்கம் விலை ஒரு கிராம் 3,021 ரூபாய்க்கும், ஒரு பவுன் 24,168 ரூபாய்க்கும் விற்பனையானது. அதன்பின்னர், தங்கத்தின் விலை இறங்கவே இல்லை. தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
எறுமுகமாக இருக்கும் தங்கத்தின் விலை, முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும், சாமான்ய மக்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட தங்கம், அன்றைய தினத்தில் ஒரு பவுன் 27,064 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகமானது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை, ஒரு கிராம் 3,473 ரூபாய்க்கும், ஒரு பவுன் 27,784 ரூபாய்க்கும் விற்பனையானது. சீக்கிரமாகவே ஒரு பவுன் தங்கம் 28,000 ரூபாயைத் தொடும் என நிபுணர்கள் கூறி வந்த நிலையில், ஆகஸ்ட் 7-ம் தேதி அந்த விலையையும் தாண்டி ஒரு பவுன் ஆபரணத்தங்கம் 28,352 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.
தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை என்ன?
தங்கம் (22 கேரட்)..........| 1 கிராம் - ₹ 3,548 | 8 கிராம் - ₹ 28,384
தங்கம் (24 கேரட்)..........| 1 கிராம் - ₹ 3,885 | 8 கிராம் - ₹ 31,080
வெள்ளி..............................| 1 கிராம் - ₹ 44.52 | 1 கிலோ - ₹ 44,525