ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் பற்றி தெரியாத அளவுக்கு நான் ஒன்றும் முட்டாள் அல்ல, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்து என ரஜினிகாந்த தெரிவித்துள்ளார்!
நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடன் பேசிய ரஜினிகாந்த் பாஜக ஆபத்தான கட்சி என கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த கருத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளதாவது...
"பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பற்றி எனக்கு தெரியாது என்ற மாயையை சிலர் உருவாக்கி வருகின்றனர்; கேள்வியை தெளிவாக கேட்டிருந்தால் சரியான பதிலளித்திருப்பேன்.
பாஜக எதிர்கட்சிகளுக்கு ஆபாத்தான கட்சி என தெரிவித்தேன்., மக்களுக்கு எதிரான கட்சியா என்பது மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். நான் இன்னும் அரசியலில் முழுமையாக இறங்காத நிலையில் பாஜக கட்சின் ஆபத்து தன்மையினை குறித்து என்னால் கருத்து தெரிவிக்க இயலாது." என தெவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பாஜக-விற்கு எதிரான எதிர்கட்சி கூட்டணி குறித்து செய்தியாளர் கேட்கையில்... ஒருவரை எதிர்க்க 10 பேர் ஒன்றுகூடினால் பலசாலி அந்த ஒருவரே தவிற, கூட்டுசேரும் 10 இல்லை என தெரிவித்தார். இந்த கருத்தின் படி பிரதமர் மோடி அவர்களை பலசாலி என குறிப்பிடுகிறிரா என செய்தியாளர் மீண்டும் கேள்வி எழுப்புகையில்... சிறு புன்னகையுடன், 'இதை விட தெளிவாக கூற முடியாது' என மீண்டும் "ஒருவரை எதிர்க்க 10 பேர் ஒன்றுகூடினால் பலசாலி அந்த ஒருவரா, இல்லை பத்து பேரா?" என மறு கேள்வி எழுப்பினார்.
பின்னர் சர்கார் திரைப்படத்தில் இலவச பொருட்கள் குறித்து விமர்சித்து இருப்பதை குறித்து கேட்கையில்... இலவசம் என்பது தேவை, மக்களின் அத்தியாவச பொருட்களை அரசு இலவசமாக வழங்குவது தவறில்லை என தெரிவித்துள்ளார்.
பிச்சைகாரர்களுக்கு தான் இலவச பொருட்கள் தேவை என கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்து குறித்து கேட்கையில்.. அது கமல்ஹாசன் கருத்து, தான் ஏதும் கூற இயலாது என குறிப்பிட்டுள்ளார்.