விருதுநகர்: தமிழ்நாட்டில் வெகு வேகமாக கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அட்மிட்டாகி சிகிச்சை பெற்றுவரும் பல நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதன் ஆக்ஸிஜன் பல உயிரிழப்பு சம்பவங்கள் நடந்துள்ளது.
தமிழகத்திற்கு தேவையான அளவுக்கு மருத்துவ ஆக்ஸிஜன் சப்ளை மத்திய அரசு வழங்காததால், ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க பல இடங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை அமைக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அதற்கு உதவ பல தனியார் நிறுவனங்கள் முன் வந்துள்ளன.
அதன் வரிசையில், ராமசாமி ராஜா நகரில் உள்ள ராம்கோ சிமெண்ட்ஸ் தொழிற்சாலையில் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் வழங்குவதற்காக இந்த ஆலை அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.
ALSO READ | Oxygen Action: முதல்வர் ஸ்டாலினின் 'ஆக்ஷன்'.. மத்திய அரசின் 'ரியாக்ஷன்'
ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்கவும், பொது மக்களின் நலனுக்காகவும் ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம், தெற்கு தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில், ராமசாமி ராஜா நகரில் உள்ள தனது தொழிற்சாலையில் மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது. இந்த ஆக்ஸிஜன் ஆலையை உற்பத்தி செய்யப்படும் மருத்துவ ஆக்ஸிஜனை ராஜபாளயம், விருதுநகர், சிவகாசி, அருப்புகோட்டை மற்றும் சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் முன்னிலையில், இந்த ஆலையை இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆர். கண்ணன், ஐ.ஏ.எஸ். திறந்து வைத்தார்.
ரூ .50 லட்சம் செலவில் நிறுவப்பட்ட இந்த ஆலை, ஒரு நாளைக்கு 48 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஒவ்வொரு சிலிண்டருக்கும் 45 லிட்டர் திரவ ஆக்ஸிஜன் திறன் உள்ளது. இது வாயு வடிவத்தில் 7000 லிட்டருக்கு சமம். ஒரு நிமிடத்திற்கு 10 லிட்டர் என்ற விகிதத்தில், ஒரு சிலிண்டர் ஒரு நோயாளிக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். இந்த ஆலையில் இருந்து தொடர்ந்து மருத்துவ ஆக்ஸிஜனை வழங்குவதன் மூலம், ஒவ்வொரு நாளும் சுமார் 24 உயிர்களை காப்பாற்ற முடியும்.
ALSO READ | ஆக்சிஜன் அதிக அளவில் உள்ள உணவுப் பொருட்கள் கொரோனாவை விரட்டுமா?
விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் படுக்கை வசதிகளை பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR