கமலா ஹாரிஸ் உறவினர்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள US பயணம்..!!!

கமலா ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபராகும்  முதல் பெண், முதல் கறுப்பின நபர் மற்றும் முதல் இந்திய-அமெரிக்கர் என வரலாறு படைத்துள்ள நிலையில், சென்னையில் உள்ள அவரது உறவினர்கள் அவரது வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.

Last Updated : Nov 8, 2020, 10:59 PM IST
  • கமலா ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபராகும் முதல் பெண், முதல் கறுப்பின நபர் மற்றும் முதல் இந்திய-அமெரிக்கர் என வரலாறு படைத்துள்ள நிலையில், சென்னையில் உள்ள அவரது உறவினர்கள் அவரது வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.
  • பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பாலச்சந்திரனின் குடும்பம் அமெரிக்காவிற்கு செல்ல உள்ளனர்.
கமலா ஹாரிஸ் உறவினர்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள US பயணம்..!!! title=

சென்னையில் உள்ள கமலா ஹாரிஸின் சென்னை குடும்பத்தினர், துணை அதிபராக கமலா வெற்றி பெற்றத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவரது பதவியேற்பு விழாவை தவறவிட முடியாது என்று கூறும் அவரது உறவினர் பாலசந்திரனின் குடும்பம் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு செல்ல உள்ளனர்.

கமலா ஹாரிஸ், (Kamala Harris) அமெரிக்க துணை அதிபராகும்  முதல் பெண், முதல் கறுப்பின நபர் மற்றும் முதல் இந்திய-அமெரிக்கர் என வரலாறு படைத்துள்ள நிலையில், சென்னையில் (Chennai) உள்ள அவரது உறவினர்கள் அவரது வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.

கமலாவின் தாய் வழி மாமாவான கோபாலன் பாலச்சந்திரன் இரண்டு நாட்களுக்கு முன்பு கமலாவுடன் பேசிய போதும் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்றும், சாதாரணமாக குடும்ப விஷயங்களை பற்றி தான் பேசுவோம் என்றும் கூறினார். எப்போதாவது தான் அரசியலைப் பற்றி பேசுவோம் என் மகள் ஏற்கனவே அமெரிக்காவில் (America) இருக்கிறாள், அவர் கமலாவிற்காக பிரச்சாரம் செய்தார் எனவும் அவர் கூறினார்.

ALSO READ | வெள்ளை மாளிகை வேந்தன் ஆனார் ஜோ பிடன்.. துணை அதிபர் கமலா ஹாரிஸ்... ஒரு பார்வை..!!!

பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பாலச்சந்திரனின் குடும்பம் அமெரிக்காவிற்கு செல்ல உள்ளனர்.

கமலா அட்டர்னி ஜெனரலாக பதவியேற்ற போது, அந்த விழாவிற்கு தாங்கள் சென்றதாக கூறிய பாலசந்திரன், அங்கு தான்  ஜோ பிடனுடன் (Joe Biden) அரட்டையடித்ததாவும் கூறினார்.

சென்னையின் உள்ள கமலாவின் சித்தியான டாக்டர் சரளா கோபாலன், தனது சகோதரி சியாமலாவிடம் (கமலாவின் தாய்) உள்ள அதே ஆர்வம் துடிப்பு காண்கிறேன் என்று  கூறினார். 

மேலும் படிக்க | Donald Trump: அரசியல் தோல்வியை தொடர்ந்து குடும்ப வாழ்க்கையிலும் தோல்வியா..!!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News