இன்று (05-06-2022 ) நடைபெற்ற திரு.முகமது ஷெரிப் அவர்களின் மகள் திருமண விழாவில் சசிகலா கலந்துக்கொண்டார். பின்னர் மணமக்களை வாழ்த்தி அறிவுரை கூறினார். அதையடுத்து அவர் உரையாற்றுகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறிய கதை ஒன்று குறித்து கூறினார்.
அப்போது சசிகலா பேசியவை பின்வருமாறு,
"ஒரு சமயத்தில் நம் அம்மா அவர்கள் உங்களுக்கெல்லாம் சொன்ன ஒரு கதைதான் இப்போது என் நினைவுக்கு வருகிறது. ஒரு புத்த மடாலயத்தில் உள்ள குருமார்கள் மிகவும் கவலையில் இருந்தனர்.
ஒரு காலத்தில் அவர்களது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது.
மேலும் படிக்க | எந்த வயதினருக்கு எந்த கொரோனா தடுப்பூசி செலுத்தலாம்?... முழு விளக்கம்
அனைவருக்கும் தெளிவாக விளங்கியது. குருமார்களில் ஒருவரோ தானே கடவுள் என்ற மமதையிலும், மற்றவர்களோ கிடைத்தது போதும் என்று எதைப்பற்றியும் சிந்திக்காமலும் இருந்து வந்துள்ளனர்.
இவர்களது நடவடிக்கைகளால் மடாலயத்தின் சிறப்பும் குறைந்து கொண்டே சென்றது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.
பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் குருமார்கள் தங்களை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார்கள். தங்கள் பிரச்னைகளை எடுத்துச் சொன்னார்கள்.
அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் இடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?” என்று கேட்டார். இதைக் கேட்ட நம் குருமார்கள் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷக்களுக்கு விபரம் சொன்னார்கள்.
அவர்களுக்கும் ஆச்சரியம், அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் அரவணைத்து பணிவாகவும்.
அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது. இதிலிருந்து நாம் அறிந்துகொள்வது என்னெவென்றால், யாராக இருந்தாலும், தனிமனித விருப்பு வெறுப்புகளை விலக்கி, அனைவருக்கும் மதிப்பளித்து, ஒன்றிணைந்து செயல்படும் போதுதான், எந்த ஒரு செயலும் சிறப்பு வாய்ந்ததாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்று தெரிவித்தார். இதில் புத்தர் என அவர் குறுப்பிட்டது யாரை என்றும், தன்னை கட்சியில் இணைத்துக்கொள்ள அறிவுறுத்துவதாக இந்த கதையை கூறினாரா என்றும் தொண்டர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்தன.
மேலும் படிக்க | மருத்துவமனைகளை தயார் நிலையில் வையுங்கள் - மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR