மேடையில் நடித்துக் கொண்டிருக்கும்போதே உயிர்விட்ட நாடகக் கலைஞர் - உருக்கமான வீடியோ!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இரணியன் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த நாடகக் கலைஞர் மேடையிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Gowtham Natarajan | Last Updated : Jul 18, 2022, 04:16 PM IST
  • இரணியன் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த நாடகக் கலைஞர்
  • நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி
  • நாடக கலைஞர்கள் மத்தியில் பெரும் சோகம்
மேடையில் நடித்துக் கொண்டிருக்கும்போதே உயிர்விட்ட நாடகக் கலைஞர் - உருக்கமான வீடியோ! title=

சத்தியமங்கலம் அடுத்துள்ள குப்பந்துறை கிராமத்தில், மழை வேண்டி ஐந்து நாட்களுக்கு இரவு நேரங்களில் இரணியன் நாடகம் நடப்பது வழக்கம். நாடகத்தை அதே ஊரைச் சேர்ந்த ராஐய்யன் (வயது 62) என்பவர் முன்னின்று நடத்துவார். இந்த வருடம் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு பந்தல் அமைத்து இரணியன் நாடகம் நடைபெற்றது.

ராஐய்யன்,இரணியன் நாடகம்,குப்பந்துறை கிராமம்,குப்பந்துறை,நாடகக் கலைஞர் ராஜய்யன்,ஊருக்காக ஆடும் கலைஞன்,

இதில் பல்வேறு வேடங்களில் 10க்கும் மேற்பட்டோர் நடித்து வந்தனர். கடைசி நாளான நேற்று நள்ளிரவில் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, நாரதர் வேதத்தில் நடித்தும், நடனமாடிக் கொண்டிருந்த ராஜய்யன் என்பவர் திடீரென மயங்கி மேடையிலேயே சரிந்து விழுந்தார்.

ராஐய்யன்,இரணியன் நாடகம்,குப்பந்துறை கிராமம்,குப்பந்துறை,நாடகக் கலைஞர் ராஜய்யன்,ஊருக்காக ஆடும் கலைஞன்,

அப்போது,உடனிருந்த மற்ற நாடக கலைஞர்கள் அவருக்கு தண்ணீர் தெளித்து முதல் உதவி அளித்தனர். பேச்சி மூச்சில்லாமல் கிடந்ததால் மயங்கிவிட்டார் என நினைத்து சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர், அங்கு உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ராஐய்யன்,இரணியன் நாடகம்,குப்பந்துறை கிராமம்,குப்பந்துறை,நாடகக் கலைஞர் ராஜய்யன்,ஊருக்காக ஆடும் கலைஞன்,

மேலும் படிக்க | தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் வரலாறும் பிண்ணனியும்: அண்ணா பெரியார் கலைஞர் கருணாநிதி

இதன் பின்னர், உயிரிழந்த ராஜய்யனின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ராஜய்யனின் இறப்பால் குப்பந்துறை கிராமமே கண்ணீர் மிதக்கிறது. நாடக மேடையில் நடித்து கொண்டிருந்த போதே, நாடகக் கலைஞர் ராஜய்யன் உயிரிழந்த சம்பவம் நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் நாடக கலைஞர்களின் சோகத்தை ஆழப்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | EV Awareness: பசுமை ஆற்றலை முன்னிலைப்படுத்திய மின்சார வாகன பேரணி

ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்
புலிகள் அழுவது ஏது? அட, பறவையும் அழ அறியாது
போர்க்களம் நீ புகும்போது
முள் தைப்பது கால் அறியாது
மகனே... மகனே... காற்றுக்கு ஓய்வென்பது ஏது? அட ஏது?  இந்த வரிகள் உயிரிழந்த ராஜய்யாவுக்கு பொருந்தும் என்றே சொல்லலாம். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News