சென்னை: சென்னை தவிர்த்து தமிழகம் முழுவதும் மற்ற மாவட்டங்களில் மொத்தம் 23% பேருக்கு கொரோனாவிற்கு எதிரான ஆண்டிபாடி இருப்பதாக செரோ சர்வேவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு (Tamil Nadu Corona) எதிரான நோய் எதிர்ப்பு திறனை கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரம் இதோ.,
ALSO READ | TN Lockdown News: தமிழகத்தில் அமலுக்கு வந்த தளர்வுகள், எவை அனுமதி
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவத்தொடங்கி 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்த கொடிய தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலாவது அலை (Corona First Wave) போல் இரண்டாவது அலையிலும் தமிழகத்தில் ஏராளமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளானோரில் பெரும்பாலானவர்களுக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்பட்டது என்பதை கண்டறிய முடியவில்லை.
இது தொடர்பாக பொதுமக்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து அதில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் உள்ளதா என்பதை கண்டறியும் பரிசோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டது. பொது சுகாதாரத்துறையினர் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழகத்தின் 765 இடங்களில் பொதுமக்களின் ரத்த மாதிரிகளை சேகரித்தனர். மொத்தம் 22 ஆயிரத்து 904 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
இதில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பொதுசுகாதாரத்துறை ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் சென்னையை தவிர பிற மாவட்டங்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த முடிவில் 23 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பாற்றல் உருவாகி உள்ளது. முழு விவரம் இங்கே காண்க.,
திருவள்ளூர்: 49 சதவீதம்
செங்கல்பட்: 43 சதவீதம்
காஞ்சிபுரம்: 38 சதவீதம்
நாகப்பட்டினம்: 9 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்புதிறன் உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் இதே போன்ற ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது 31 சதவீதம் பேருக்கு எதிர்ப்பாற்றல் கண்டறியப்பட்டது. 22690 இல் 6995 மாதிரிகள் ஆன்டிபாடிகளை உருவாக்கியதாகக் கண்டறியப்பட்டது.
கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடுவதற்கு முன்பே ஆய்வு நடத்தப்பட்டதும் இதற்கான காரணமாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் உருமாறி வீரியம் அடைந்து இருப்பதும் எதிர்ப்பாற்றல் உருவாகாமல் இருக்க காரணமாக கூறப்படுகிறது.
ALSO READ | Corona Symptoms Medication- மருந்தகங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR