ஈச்சம்பாடி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு!

தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

Last Updated : Sep 27, 2018, 07:53 PM IST
ஈச்சம்பாடி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு! title=

தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...

"தருமபுரி மாவட்டம், ஈச்சம்பாடி அணையின் வலது மற்றும் இடது வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தருமபுரி மாவட்டம், ஈச்சம்பாடி அணையின் வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் 1.10.2018 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 6250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்

Trending News