INX மீடியா தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!!
டெல்லி: ஐ.என்.எக்ஸ் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. இதனை அடுத்து, அவர் 105 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுதலை ஆகிறார்.
INX நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் புகார் உள்ளது. இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் CBI சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இரண்டும் தனி தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினார்கள். ஆனால் உடனடியாக அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை கைது செய்து விசாரித்தது. அமலாக்கத்துறை வழக்கில் தற்போது ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் ஜாமின் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் R.பானுமதி, AS.போபண்ணா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பை நவம்பர் 28 ஆம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
Supreme Court directs P Chidambaram to furnish a bail bond of Rs 2 lakhs along with 2 sureties of the same amount. SC also says Chidambaram can not travel abroad without the Court's permission. https://t.co/JTs5nGBpJd
— ANI (@ANI) December 4, 2019
இதில், சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அதே சமயம், இவ்வழக்கு தொடர்பாக சிதம்பரம் பேட்டி அளிக்கவோ, அறிக்கை வெளியிடவோ கூடாது. சாட்சிகளை கலைக்கவோ, ஆதாரங்களை அழிக்கவோ முயற்சிக்க கூடாது. பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். அனுமதி இல்லாமல் பயணம் மேற்கொள்ளக்கூடாது. விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் ரூ.2 லட்சம் சொந்த பிணைத்தொகை செலுத்தவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் சிதம்பரத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியதை அடுத்து திகார் சிறையில் இருந்து 106 நாட்களுக்கு பிறகு சிதம்பரம் வெளியே வர உள்ளார்.