தமிழ்நாடு சட்டப்பேரவையில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, கேஎன் நேரு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் விளக்கம் அளித்தார்.
வானதி சீனிவாசன்: இன்று தாய் மொழி நாள்... பட்ஜெட்டை தாக்கல் செய்த இரண்டு அமைச்சர்களும் அற்புதமாக தமிழில் பேசினார்கள். தமிழ் ஆசிரியர் வகுப்பில் இருப்பது போல் இருந்தது. கோவையில் நூலகம் அமைப்பதற்கான அறிவிப்புக்கு நன்றி சொல்லி கொள்கிறேன். அது உடனடியாக செயலாக்கம் பெற வேண்டும். வங்கி , ரயில்வே பணிக்கு பயிலும் மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்குவது வரவேற்கத்தக்கது . ஆனால் ஆயிரம் மாணவர்கள் என்பதை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும். மத்திய அரசு வேலைக்கு நம் ஆட்கள் இல்லை என்றால் , தமிழகத்திற்கு இந்தி பேசுவோர்தான் வேலைக்கு வருவார்கள் . அதன் பிறகு வேல்முருகன் போன்றவர்கள் ஒழிக என அங்கு கோசம் போடுவார்கள். நம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் உத்தர பிரதேசத்தில் கூட தமிழ் பேசலம்.
வேல்முருகன்: கடந்த காலங்களில் போலியாக தமிழில் தேர்ச்சி பெற்ற வட மாநிலத்தவர்கள் மீது வழக்கு போட்டு, தமிழ் நாட்டவர்களுக்கு வேலை பெற்று தந்தவன் இந்த வேல்முருகன்
அமைச்சர் சி. வி. கணேசன்: 38 மாவட்டங்களிலும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 4500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதன் மூலம் வேலை பெற்றுள்ளனர்.
வானதி: கோவைக்கு விரைவில் மெட்ரோ ரயில் வர வேண்டும், 2 ஆண்டில் அத்திட்டம் வர வேண்டும்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: தமிழகத்தில் மெட்ரோ திட்டங்களை செயல்படுத்த உரிய ஒப்புதலை வழங்க மத்திய அரசு மறுப்பது ஏன் ? கொச்சிக்கு ஒப்புதல் கொடுத்தார்கள் ஆனால் சென்னைக்கு ஏன் ஒப்புதல் தரவில்லை. கோவைக்காவது உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி மெட்ரோ ரயிலை பெற்று தாருங்கள். இன்று வரை சென்னை மெட்ரோ 2ம் கட்டத்திற்கு ஒரு பைசா கூட தரவில்லை.
வானதி சீனிவாசன்: சென்னை, மதுரை, கோவை நகரங்களில் மெட்ரோ பணிகளுக்கு தேவைப்படும் தகவலை தந்தால் மத்திய அரசிடம் பேசி உங்களுக்கு உதவ தயார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உங்களுடன் சேர்ந்து நிற்பதே எங்கள் பணி.
தங்கம் தென்னரசு: எங்களுடன் சேர்ந்து நிற்பதற்கு தயார் என்று சொன்ன வானதி, உங்கள் முன்னாள் நண்பர்களை அழைத்து பார்த்திருக்கலாம். அவர்கள் உங்களுடன் வருகிறார்களா என்று தெரிந்திருக்கும்.
சபாநாயகர்: ஆமாமா... ஒன்நேகால் மணி நேரம் தங்கமணி கூட பேசிட்டு இருந்திங்கலே....
வானதி சீனிவாசன்: பத்திரிக்கை கூட 15 நிமிடம் என்றது, நீங்க ஒன்நேகால்மணி நேரம் என்று சொல்கிறீர்கள்.
துரைமுருகன்: எங்கள் ஊரின் மருமகள்... அவர் இன்னும் கொஞ்ச நேரம் பேசட்டும்.
வானதி சீனிவாசன்: அவை முன்னவருக்கு நன்றி. சித்த மருத்துவ கல்லூரிகளை மேம்படுத்த வேண்டும். திருநங்கை, திருநம்பிகள் குறித்து பேசுகிறோம். ஆனால் சில குழந்தைகள் பாலின உறுப்புகளே இல்லாமால் பிறக்கின்றனர். அவர்களுக்கு உறுப்பு குற அறுவை சிகிச்சை செய்வதற்கு 2019 -ல் தமிழக அரசு தடை போட்டுள்ளது. அதை நீக்க வேண்டும்.
அமைச்சர் டிஆர்பி ராஜா: அதுகுறித்த புதிய கொள்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
வானதி சீனிவாசன்: கோவைக்கு, சென்னைக்கு இருப்பதுபோல் பெருநகர மாநகராட்சி ( metro politan) தகுதி வேண்டும். Smart City திட்டம் மூலம் கோவையில் குளங்களை சீர்படுத்த வேண்டும். கோவையில் அனைத்து குளங்களிலும் பசுமாடு திரிகிறது.
மேலும் படிக்க | தேசிய நெடுஞ்சாலை விபத்தில் சிக்கிய ஓட்டுநர்: போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்
சபாநாயகர்: பசுமாடு கடவுள் மாதிரி, அது குளத்தில் மேயட்டுமே, அதில் என்ன தப்பு.
வானதி சீனிவாசன்: பசுமாட்டை எங்க வளர்கணும்னு இருக்கு. இதில் என்ன கிண்டல். நொய்யல் ஆறு சீரமைப்பு குறித்து கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும், சீர் செய்ய அறிக்கை தயார் செய்யப்படும் என்று மட்டுமே பட்ஜெட்டில் கூறியுள்ளனர். ஒரு திட்டத்தை அறிவித்தால் உடனே நிறைவேற்ற வேண்டும். நொய்யல் ஆற்றை சீரமைக்க அரசுக்கு உதவ தொழில் அதிபர்கள் தயாராக உள்ளனர். தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வோருகான ஊதியத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டும்.
அமைச்சர் நேரு: கோவையில் அதிக மழைப்பொழிவு இருந்ததால் மோட்டார் மூலம் மழை நீரை வெளியேற்றும் சூழல் உள்ளது. மாநகராட்சி பகுதியில் மாடு வளர்க்க கூடாது என சட்டம் உள்ளது.
வானதி: இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கிடைக்க உதவ வேண்டும்.
சபாநாயகர்: குடியுரிமையை மத்திய அரசான நீங்கதான் வாங்கி தரணும். சிஏஏவில் கூட இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டும்னு இல்லையே.
வானதி: இலங்கையில் இருந்து வரும் தமிழர்களில் இரண்டு வகையினர் உள்ளனர். பூர்வீகமாக இலங்கையில் வாழ்வோர், மற்றும் இந்திய வம்சவளி மலையக தமிழர். மலையக தமிழர்களுக்கு ஆவணங்களுடன் மத்திய அரசை அணுகினால் குடியுரிமை பெற முடியும். விமான நிலைய விரிவாக்கங்களுக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்துகிறது. ஆனால் கையகப்படுத்தும் நிலங்கள் மீது தமிழக அரசு விதிக்கும் கட்டுப்பாட்டால் மத்திய அரசால் விமான நிலையங்களை மேம்படுத்த முடியவில்லை.
அமைச்சர் ராஜா: கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக நீங்கள் பேசுவது போல உள்ளது. நாங்கள் நிலத்தை கையகப்படுத்தி விமான நிலைய ஆணையகத்திற்கு கொடுக்கிறோம். நாங்கள் கொடுக்கும் நிலத்தை தனியாருக்கு அவர்கள் தாரை வார்க்க பார்க்கிறார்கள். தமிழக மக்கள் வரிப்பணம் தமிழ் நாட்டிடம்தான் இருக்க முடியும். உங்களுக்கு தாரை வார்த்து தர முடியாது. கார்பரேட்டுக்கு நாங்கள் நில தானம் செய்ய முடியாது. எங்களுக்கும் அந்த நிலத்தில் உரிமை இருக்க வேண்டும். விமான நிலையங்களை விரிவாக்கம் செய்ய மத்திய அரசின் கருணை எல்லாம் இனி தேவை இல்லை. பல நிறுவனங்கள் விமான நிலைய விரிவாக்கத்திற்காக அவர்களாகவே முன் வருகின்றனர்.
எஸ்பி வேலுமணி (அதிமுக): எங்கள் ஆட்சியில் தலைமை செயலாளரை நேரில் அனுப்பி நாங்கள் நிலத்தை கையகப்படுத்தினோம். நீங்கள் நிலத்தை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். எப்போது பணி முடியும், கோவைக்கு எப்போது கார்கோ விமானங்கள் வரும்.
அமைச்சர் ராஜா: எங்கள் ஆட்சியில்தான் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது, அவர்கள் (அதிமுக) ஆட்சியில் நிலத்தை முழுவதுமாக கையகப்படுத்தவில்லை.
எஸ்பி வேலுமணி: நாங்கள் ஆட்சியில் இருந்தபோது 500 ஏக்கர் தேவைப்பட்டது. அதை கையகப்படுத்தி இருந்தோம். கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படிருந்தால் கோவைக்கு Cargo flight, ஐடி company அதிகமாக வந்திருக்கும். நாடாளுமன்ற உறுப்பினர் அதிகம் வைத்துள்ள திமுக, இதுகுறித்து நாட்டாளுமன்றத்தில் பேச வேண்டும்.
அமைச்சர் ராஜா: விரைவாக பணியை முடிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கோவைக்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்துள்ளது.
வானதி சீனிவாசன்: நான் கார்ப்பரேட்க்கு ஆதரவாக பேசுவதாக அமைச்சர் ராஜா கூறுகிறார். பிறகு ஏன் முதலீட்டாளர் மாநாடு நடத்தி கார்ப்பரேட்களை அழைத்து வரிங்க. கோவைக்கு மட்டும் ஏன் இந்த அநியாயம்..?
அமைச்சர் ராஜா: இவளோ கோபம் தேவை இல்லை. சென்னைக்கு வர வேண்டிய விமானங்களை மத்திய அரசு பெங்களூருக்கு அனுப்புகிறது. ஓசூர் போன்ற இடங்களில் பெரிய விமான நிலையம் கொண்டுவர நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மேலும் படிக்க | தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியின் முழு பயண திட்டம்.! எங்கு செல்கிறார்?
மேலும் படிக்க | த்ரிஷா - கூவத்தூர் சர்ச்சை... ஏவி ராஜூ மீது நடிகர் கருணாஸ் புகார்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ