பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பேச்சே இல்லை... அரசு ஊழியர்களின் நிலை என்ன?

TN Budget 2023: தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பு இடம்பெறவில்லை.

Written by - Sudharsan G | Last Updated : Mar 20, 2023, 01:55 PM IST
  • எடப்பாடி பழனிசாமி அரசுக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.
  • இருப்பினும், பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பேச்சே இல்லை... அரசு ஊழியர்களின் நிலை என்ன? title=

TN Budget 2023 Old Pension Scheme: தமிழ்நாடு அரசின் 2023-2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். சுமார் காலை 10 மணிக்கு தனது பட்ஜெட் உரையை தொடங்கிய நிதியமைச்சர், மதியம் 12 மணியளவில் தனது உரையை நிறைவுசெய்தார். 

சுமார் 2 மணிநேரம் நீடித்த பட்ஜெட் உரையில், பல்வேறு புதிய அறிவிப்புகளையும், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பாக மகளிருக்கான 1000 ரூபாய் திட்டம் வரும் செப். 15ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தொகையும் செப். 15ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், பத்திரப்பதிவு கட்டணம், 4 சதவீதத்தில் இருந்து, 2 சதவீதமாக குறைத்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மதுரை, கோயம்புத்தூருக்கான மெட்ரோ ரயில் நிதி ஒதுக்கீடு என இதுபோன்று எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பழைய ஓய்வதிய திட்டம் குறித்து இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் திமுக வைத்திருக்கும் மறைமுக செக் - வலுக்கும் எதிர்ப்பு!

இது அரசு ஊழியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் வழங்கப்படும் என்று திமுக சொன்னது எப்போது வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தாமதம்?

புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு அரசு ஊழியர்களை மாற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. இதையொட்டி, கடந்த பிப். 28ஆம் தேதி, பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு மாற விரும்பும் அரசு ஊழியர்கள் விவரங்களை சேகரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் அரசின் சுற்றறிக்கை ஒன்றும் வெளியானது.

ஆனால், இதுகுறித்த அறிவிப்புகள் தற்போது வெளியாகவில்லை. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதால், அறிவிப்புகள் தாமதமாகலாம் என கூறப்படுகிறது. ஆனால், அரசு ஊழியர்களுக்கு பயனளிக்கும் அறிவிப்பையைும் பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது. 

ரூ. 10 லட்சம் உயர்வு

அதாவது, அரசுப்பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன் பணம் ரூ. 40 லட்சத்தில் இருந்து ரூ. 50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர்ந்து வரும் கட்டுமானச் செலவுகளைக் கருத்திற்கொண்டு இத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பழைய அரசு அலுவலர் குடியிருப்புகள் படிப்படியாக புதிதாகக் கட்டித்தரப்படும் என்றும், வரும் நிதியாண்டில் இதற்காக ரூ. 100 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | TN Budget 2023: திமுகவின் திட்டங்களால் கல்வித்துறையின் முன்னேற்றங்கள் - புட்டு புட்டு வைத்த பிடிஆர்!
 

Trending News