TN Bus Strike:இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்

போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று முதல் தொடங்குவதாக தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 25, 2021, 06:36 AM IST
  • இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்
  • தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
  • டிசம்பர் 3 ம் தேதி அழைப்பு விடுத்திருந்த வேலைநிறுத்தம், "சமூக பொறுப்பு" என்று கூறி திரும்பப் பெறப்பட்டது
TN Bus Strike:இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின்   வேலைநிறுத்தப் போராட்டம்   title=

TN Bus Strike: போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று முதல் தொடங்குவதாக தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
 
தமிழக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் டிசம்பர் 3 ம் தேதி வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன, ஆனால் "சமூக பொறுப்பு" என்று கூறி போராட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றன.

ஆனால், பல்வேறு தொழிற்சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் சென்னை பல்லவன் சாலையில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Also Read | புஜாரா இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்ற அமித் ஷாவின் விருப்பம் டக் அவுட் ஆனது 

தொழிலாளர் முற்போக்கு கூட்டமைப்பு (LPF), இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் Indian National Trade Union Congress (INTUC), இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU), ஹிந்த் மஜ்தூர் சபா (HMS) உள்ளிட்ட ஒன்பது தொழிற்சங்கங்கள் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டன. இந்த வேலைநிறுத்தம் பெருநகர போக்குவரத்துக் கழகம் உட்பட எட்டு மாநில போக்குவரத்து நிறுவனங்களை (STU) உள்ளடக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

ஒன்பது தொழிற்சங்கங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட ஒரு லட்சம் தொழிலாளர்கள் தமிழகத்தில் நடைபெறும் பேருந்து வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள்.

ஆலோசனைக்கு பிறகு கூட்டறிக்கை ஒன்று விடப்பட்டது. அதில், ” போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 18 மாதமாக நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத் துறை அமைச்சரும், நிர்வாகமும் எந்தவித முன்தயாரிப்பும் இல்லாமல் வந்து கலந்துகொண்டதுடன், முறையான பதிலை தெரிவிக்காமல் கூட்டத்தை முடித்துக்கொண்டனர்”.

Also Read | பெளர்ணமி தினத்தின்  முக்கியத்துவம் என்ன? பவுர்ணமியின் சிறப்பு தெரியுமா?

”தொடர்ந்து அடுத்த கூட்டம் எப்போது நடத்தப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுதொடர்பாக பலமுறை கேட்டும் பதில் இல்லை. இதனால் வேறு வழியின்றி காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யும் முடிவுக்குக் தள்ளப்பட்டு உள்ளோம். அதற்கான அறிவிப்பையும் முறையாக வெளியிட்டுள்ளோம்”.

"திட்டமிட்டபடி 24-02-2021 நள்ளிரவு முதல் தொடங்கும். 95 சதவீத தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தருவதால் பேருந்துகள் ஓடாது. பொதுமக்களின் சிரமத்துக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க கோருகிறோம். அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிற்சி இல்லாதவர்களை வைத்து பேருந்துகளை இயக்கி அப்பாவி பயணிகளை நிர்வாகம் ஆபத்துக்குள்ளாக்க வேண்டாம்" என்று தொழிற்சங்கங்கள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது .

ALSO READ | உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News