இயற்கைச் சூழலுடன் இணைந்து வாழும் பழங்குடியின மக்களுக்காக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி உலகம் சர்வதேச பழங்குடியினர் தினம் கொண்டாடப்படுகிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் "பரளிக்காடு மலைக் கிராமத்தில் வசிக்ககூடிய பழங்குடியின மக்கள் அவர்களுடைய பாராம்பரிய இசை மற்றும் நடனத்துடன் ஆடிப் பாடி கொண்டாடினார்கள்.
மலைகளுக்கு இடையே இயற்கை சூழலோடு வாழும் இம்மக்களுக்கு வாழ்வில் இன்பமோ, துன்பமோ எதுவென்றாலும் அவர்களுக்கு இசை ஒன்றே அவர்களுக்கு விருப்பமானதாகும். அதுவும் அவர்களுடைய பாராம்பரிய இசை கருவிகளுடன் குழுவாக ஆடி, பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
வனத்துறையின் சார்பில் ஆகஸ்ட் 9 சர்வதேச பழங்குடியினர் தினத்தன்று மேட்டுப்பாளையத்தில் உள்ள "பரளிக்காடு பழங்குடியின கிராமத்தில் வனத்துறையின் சார்பாக பழங்குடி மக்களுக்கு ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விழாவில் "பில்லூர் அணைப் பகுதியை சுற்றியுள்ள பத்திற்கும் மேற்பட்ட ஊர்களில் உள்ள நூற்றுக்கணக்கான மலைக்கிராம மக்கள் கலந்து கொண்டு பாராம்பரிய இசை கருவிகளின் வாத்திய முழக்கங்களோடு ஒருவருக்கொருவர் ஆடல், பாடல் என தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
"பழங்குடி மக்களுக்கு நடத்தப்பட்ட இந்த விழாவில் அவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதற்கும், நம்பிக்கையூட்டுவதற்கும் வனத்துறையின் சார்பில் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
பின் வனத்துறை அதிகாரிகளிடம் பழங்குடியின மக்கள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர். எங்களுக்கு இது நாள் வரை சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடங்களில் சேர்ப்பதற்கு சிரமமாக உள்ளது. அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே எங்களுக்கு உடனடியாக "சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இது தவிர கொரோனா பெருந்தொற்றால் சுற்றுலா பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளதால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
"சுற்றுலா பயணிகளுக்கு பரிசல் ஓட்டுவது, உணவு தயாரித்து கொடுப்பது போன்ற வேலைகளின் மூலம் வந்த வருமானமும் ஊரடங்கு கட்டுபாடுகளால் எங்களுக்கு கேள்விக்குறியாகி உள்ளது. இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்றும் "சாதி சான்றிதழ்களை உடனடியாக வழங்கினால் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அரசின் நலத்திட்ட உதவிகள் எங்களுக்கு வந்து சேரும் என வனத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.
"இப்படி இயற்கையோடு இணைந்து வாழும் இந்த பழங்குடி மக்களின் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து சமந்தபட்ட அதிகாரிகள் அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தாலே அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். செவிமடிப்பார்களா அதிகாரிகள்???
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR