தமிழக சட்டப் பேரவையில் 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விவாதக் கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தில், மதுரை மேற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பினார். அதில் மதுரை உள்ளிட்ட மாநகர் பகுதிகளில், குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டும்தான் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும், இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பெண்கள் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடிவதில்லை என்றும் கூறினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மகளிர் பேருந்து என்பது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டம் என்றும், அந்தக் கனவுத் திட்டம் மிக வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு முதலில் 40 சதவீதம் என வைத்தோம் என்றும், ஆனால், தற்போது 61.82 சதவீதமாகக் கூடிவிட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | ‘எனக்கு எதுவுமே தெரியாது’ - பார்ட் 2 ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பி.எஸ் சொல்லும் பதில்.!
மேலும், பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் திட்டத்திற்கு முன்பு ஆயிரத்து 380 கோடி ரூபாய் ஒதுக்கிய அரசு, இந்த முறை ஆயிரத்து 510 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளதாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார். அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமாக விட்டால், பிறகு எப்படி போக்குவரத்துக் கழகத்தை நடத்துவது? என்று பேசியவர், ஏற்கெனவே 48 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் போய்க்கொண்டிருப்பதாக அவர் பதிலளித்தார்.
மேலும் படிக்க | Dubash: தமிழகத்தின் முதல் பெண் துபாஷ் ராஜலட்சுமி! சட்டமன்ற சபாநாயகரின் உதவியாளர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR