School College Leave Update: வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றெடுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் ஓரிரு இடங்களில் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் காரைக்காலில் அதிக கனமழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மிக கனமழை வாய்ப்பு
விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் புதுவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழையும், நாளை கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் அதிக கனமழையும் பெய்யலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.
சென்னையில் கனமழை பெய்யலாம்
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் வரும் 28 ஆம் தேதி மிக கனமழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது சென்னையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மீனவர்கள் 29 ஆம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது
இன்று பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை
அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழலில் நாகை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதிக மழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிகான மழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கையாக இன்று பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.
காரைக்கால் மாவட்டத்துக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், நள்ளிரவில் திருநல்லாறு, சேத்தூர், நெடுங்காடு, திருப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது இதனால் முன்னெச்சரிக்கையாக மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை காரணமாக தேர்வுகள் ஒத்திவைப்பு
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவிருந்த இளநிலை முதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் மற்றொரு நாளில் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற்றிருப்பதாக முதல்வர் கூறியுள்ளார். மேலும் பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க - 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... சென்னையில் எப்போது மழை? - லேட்டஸ்ட் வானிலை அப்டேட்
மேலும் படிக்க - இரட்டை இலை யாருக்கு? ஒரு வாரத்தில் முக்கிய உத்தரவு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மேலும் படிக்க - தமிழக அரசுக்கு தமிழக வெற்றிக் கழக சார்பில் விஜய் வைத்துள்ள கோரிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ