'அனைவருக்காகவும் யோசித்த கலைஞர்...' உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்த கருணாநிதி!

Karunanidhi Inclusive Politics: கலைஞர் கருணாநிதி தனது திட்டங்களிலும், செயல்பாட்டிலும் எப்படி அனைவரையும் உள்ளிடக்கிய வகையில் சிந்தித்தார் என்பது குறித்தும், அதன் முக்கியத்துவத்தையும் அவரது 101ஆவது பிறந்தநாளான இன்று நினைவுக்கூர்வது அவசியமாகும். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 3, 2024, 01:32 PM IST
  • கருணாநிதி மாற்றுத்திறனாளி என்ற சொல்லை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தவர்.
  • அவரின் சாதனைகளில் முக்கியமான ஒன்று புதிய சட்டப்பேரவை கட்டடமாகும்.
  • கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாள் இன்று.
'அனைவருக்காகவும் யோசித்த கலைஞர்...' உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்த கருணாநிதி! title=

Karunanidhi Inclusive Ideology Politics: 2024ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு முக்கியச் சொல் Inclusiveness. அதாவது தமிழில் இதனை அனைவரையும் உள்ளடக்கிய சிந்தனை எனலாம். உதாரணத்திற்கு நீங்கள் பொதுவெளியில் பேசும்போது வெறும் ஆண்களையும், பெண்களையும் மட்டும் குறிப்பிட்டு பேசினால் அது தவறான ஒன்றாகும். அனைவரையும் உள்ளிட்டக்கிய தன்மையுடன் நீங்கள் ஆண், பெண், திருநங்கைகள், திருநம்பிகள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் என பலதரப்பட்ட பாலினத்தவர்களையும் மனதில் பேசுவதே சரியாகும். 

முன்னர் சொன்னது போன்றே இந்த கருத்து உலகம் முழுவதும் தற்போது வலுவாக்கப்பட்டு வருகிறது எனலாம். ஆனால், இதனை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் ஒருவர் செயலில் செய்துகாட்டினார் என சொன்னால் பலராலும் நம்ப முடியாது. அப்படியொருவர் இருந்தார், அவர்தான் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி. இன்று கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாள். துண்டு பிரசுரங்கள், கையெழுத்து பத்திரிகை என தொடங்கி ட்விட்டர் காலம் வரை வாழ்ந்த கருணாநிதி, அவர் கொண்டுவந்த அரசு திட்டங்களில் எவ்வாறு அனைவரையும் உள்ளடக்கி சிந்தித்தார் என்பதை விரிவாக காணலாம்.

மேலும் படிக்க | கண்டிப்பாக படிக்க வேண்டிய கருணாநிதியின் சிறந்த 8 புத்தகங்கள்... காலத்தால் அழிக்க முடியாதவை!

கருணாநிதியின் உயர் சிந்தனை

கருணாநிதியின் ஆட்சியின் கீழ் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய சட்டப்பேரவை கட்டடம் ஒன்று கட்டப்பபட்டது. பலருக்கும் அது தெரிந்திருந்தாலும் அந்த கட்டடத்தின் வடிவமைப்பில் ஒளிந்திருக்கும் ஜனநாயக பண்புகளை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த கட்டடம் இப்போது சட்டப்பேரவையாக செயல்பாடாவிட்டாலும் எப்படி மக்கள் புழக்கத்திற்கு அதனை தகவமைத்து கொண்டது என்பதற்கு இந்த ஜனநாயக பண்புகள்தான் முக்கிய காரணமாகும். 

ஜனநாயக பண்பு என்றால் பாமர மக்கள் முதல் அனைவரும் அந்த கட்டடங்களை எளிதில் அணுகும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். பாமர மக்கள் என்றில்லை மாற்றுத்திறனாளி மக்களும், அனைத்து வயதினரும், அனைத்து பாலினத்தவர்களும் அங்கு சென்று, தங்களுக்கான சேவைகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்தே ஓமந்தூரார் வளாகத்தில் கட்டப்பட்ட புதிய சட்டப்பேரவை வடிவமைக்கப்பட்டது.மக்களை எளிமையாக அதிகாரிகளை சந்திக்கவும், மாற்றுத்திறனாளிகள் எவ்வித பிரச்னையும் இன்றி சென்று வர சறுக்கு வசதிகள் என அனைத்தும் வருங்காலத்தை யோசித்தும், அனைத்து தரப்பு மக்கள் மனதில் வைத்தும் உருவாக்கப்பட்டவை.  

வேறு எங்கும் காண இயலாது...

நீங்கள் இந்தியாவில் என்றில்லை உலகில் எந்த ஜனநாயக நாட்டிலும் அதன் சட்டம் இயற்றும் மன்றங்களை பார்வையிட்டால் அவரை மன்னராட்சி காலத்தின் கூறுகளை நிச்சயம் கொண்டிருக்கும். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அனைத்து தரப்பு மக்களாலும் அந்த மன்றங்களுக்குள் செல்ல இயலாது. அந்த கட்டடங்கள் எளிய மனிதர்கள் அணுகும் விதத்தில் இருக்கவே இருக்காது. உதாரணத்திற்கு நமது தற்போதைய செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையே கூறலாம். இதெல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது என்று நீங்கள் சொன்னாலும் இப்போது கட்டப்பட்டுள்ள எந்த சட்டப்பேரவைக்கு சென்றாலும் நான் மேலே கூறிய ஜனநாயக பண்புகளை உங்களால் பெரிதாக காண முடியாது.

முக்கிய திட்டங்கள்

இதுமட்டுமின்றி, சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது, அருந்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு, பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு ஆகியவையும் கலைஞரின் அனைவரையும் உள்ளடக்கிய சிந்தனையில் மிக முக்கியமான திட்டங்களாகவும். இதனால், அரசு பணிகளில் வெறும் முற்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள் மட்டுமின்றி அனைத்து சமூகங்களில் இருந்தும் பிரதிநிதிகள் அந்த இடத்திற்கு வர இந்த இட ஒதுக்கீடு திட்டங்கள் உதவின எனலாம்.

'மாற்றுத்திறனாளி', 'திருநங்கை' உள்ளிட்ட பதங்களை பயன்பாட்டில் கொண்டு வந்ததிலும் கருணாநிதியின் இந்த அனைவரையும் உள்ளடக்கிய சிந்தனையின் விளைவுதான். எனவே, இன்றைய ஆட்சியாளர்களும், மக்களும் தங்களின் ஒவ்வொரு திட்டத்திலும் செயல்பாட்டிலும் அனைவரையும் உள்ளடக்கிய சிந்தனை உடன் செயல்படும் போது சமூக முன்னேற்றம் என்பது தவிர்க்க முடியாததாகிவிடும். இந்த காலகட்டத்தில் கருணாநிதியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் இதுதான். இதையெல்லாம், ஓட்டு வங்கிக்கு என்று யாராலுமே சொல்ல இயலாது. மாற்றுத்திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் ஓட்டு வங்கி என்ற ஒன்றே கிடையாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  

தமிழ்நாட்டில் இன்று ஆட்சியில் இருக்கும் திமுக அரசின் கோஷங்களில் "எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்பது முக்கிய ஒன்றாக இருக்கிறது. மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு என அமைக்கப்பட்ட பிரத்யேக வழித்தடமும் இந்த சிந்தனையில் வந்த திட்டம்தான். அந்த சிந்தனை இப்போது வந்தது கிடையாது, தொன்றுதொட்ட வந்த திராவிட பாரம்பரியத்தின் நீட்சியே. அந்த பாரம்பரியத்தில் முத்துவேல் கருணாநிதியின் பங்கை யாராலும் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.

மேலும் படிக்க | Exit Poll: கருத்துக்கணிப்பில் தமிழ்நாடு நிலவரம் என்ன...? வல்லுநர்கள் விவாதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News