சிறுமியை தலையில் கட்டையால் தாக்கி பாலியல் வன்கொடுமை: கொடூரன் கைது!

சந்தோஷ் என்ற 19 வயது இளைஞர் சிறுமியை இப்படி செய்தது தெரியவந்தது.  இதையடுத்து அந்த இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 21, 2022, 04:47 PM IST
  • சிறுமியை தாக்கி பாலியல் வன்கொடுமை
  • மருத்துவமனையில் சிறுமி சிகிச்சைக்காக அனுமதி
  • 19 வயது இளைஞர் போக்சோவில் கைது
சிறுமியை தலையில் கட்டையால் தாக்கி பாலியல் வன்கொடுமை: கொடூரன் கைது!  title=
15 வயது சிறுமியை கட்டையால் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்து சாலையோரத்தில் வீசிய இளைஞரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
 
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே வசித்து வரும் 15 வயது சிறுமி தனது அத்தை வீட்டில் தாயுடன் தங்கி வருகிறார். இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நேற்று முதல் நாள் இரவு சிறுமியை வீட்டில் உள்ளவர்கள் கடைக்கு பொருள் வாங்க அனுப்பியுள்ளனர். அப்போது தனது தெருவில் உள்ள கடை பூட்டி இருந்ததால்,  பக்கத்து தெருவில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சிறுமி சென்றுள்ளார்.
 
 
அப்போது அவரை பின்தொடர்ந்த இளைஞர் ஒருவர் உருட்டுக்கட்டையால் சிறுமியின் பின்தலையில் தாக்கியுள்ளார். இதனால் மயக்க நிலைக்கு சென்ற சிறுமியின் இரண்டு கைகளையும் பின்னால் வைத்து கட்டி வாயில் துணியை வைத்து அடைத்து தூக்கிச் சென்றுள்ளார். இரவு நேரம் என்பதால் யாரும் தெருவில் இல்லை. அதன்பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு சாலை ஓரமாக தூக்கி வீசி சென்றுள்ளார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
Acquist Of This Abuse Case
 
 
மேலும் இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் தொடர்ந்து குடவாசல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குடவாசல் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற 19 வயது இளைஞர் சிறுமியை இப்படி செய்தது தெரியவந்தது.  இதையடுத்து அந்த இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
 
சமீப காலமாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கொரோனா லாக்டவுன் காரணமாக பல மாணவர்கள் படிப்பை தொடர முடியாமல் உள்ளனர். அதே போல சிலர் தேவையற்ற போதைப்பழக்கங்களுக்கு அடிமை ஆகி இப்படி செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். போக்சோ வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு உடனடியாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News