மதுபானம் அருந்துவோர் அளவாக குடித்தால் பிரச்சினை ஏதும் இல்லை என அமைச்சர் தங்கமனி தெரிவித்துள்ளார்!
சட்டப்பேரவையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மதுபானங்களின் தரம் குறைவாக உள்ளதாகவும், இதனால் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, உடனடியாக அனைத்து மதுக்கடைகளையும் மூடினால் கள்ளச்சாராயம் புகுந்துவிடும் என்பதாலேயே, படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்பட்டு வருகிறது. மதுபானம் அருந்துவோர் அளவாக குடித்தால், பிரச்சினை இல்லை என்றும், அளவுக்கு அதிகமாக குடித்தால் மட்டுமே உடல்நலம் கெட்டுப்போவதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில், 6,132-ஆக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கை 5,152 கடைகளாக குறைக்கப்பட்டிருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மதுவினால் ஏற்படும் விபத்துகளுக்கு மது அருந்துபவர்களே காரணம். மதுவை அளவாக அருந்தினால் பிரச்சனைகள் ஏதும் வருவதில்லையே., எனவே, அதற்காக, தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டு பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ.2,000 கூடுதலாக அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.