நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பெருமாள் கோவில் மேடு பகுதியில் லஷ்மி விலாஸ் வங்கிக்கு சொந்தமாக ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வந்தது.
கடந்த 5-ந் தேதி, அந்த ஏ.டி.எம் இயந்திரம் கேஸ் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.4.90 லட்சம் பணம் கொள்ளை போனது.
இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் 15 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் புரஜாபாத் (32) மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது இம்ரான் (28) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், ஒரு லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட கார், வெல்டிங் மிஷின், கியாஸ் சிலிண்டர், கோடாரி மற்றும் கடப்பாரையும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் படிக்க | விராட் கோலியின் விரக்தி - மைக் ஹெசன் விளக்கம்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி,
"பெருமாள் கோவில் மேடு பகுதியில் ஏ.டி.எம். இயந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போன வழக்கில் சுரேஷ் புரஜாபாத், முகமது இம்ரான் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அதில் ராஜஸ்தானை சேர்ந்த சுரேஷ் புரஜாபாத், சேலத்தில் 10 ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறார். விரைவில் பணக்காரராக ஆசைப்பட்டு சுரேஷ், தனது நண்பர் இம்ரானுடன் சேர்ந்து ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மேலும் ஏடிஎம் இயந்திரத்தை உடைப்பதற்காக யூடியூபில் ஏடிஎம் இயந்திரத்தை பழுது நீக்குவது குறித்த பல வீடியோக்களை பார்த்து அதன் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்துள்ளது" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் மையத்தில் சிசிடிவி, அலாரம் உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு அம்சங்களும் செயல்படாததால் குற்றவாளிகளை பிடிக்க தாமதமானது.
எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் முறையாக செயல்படுகிறதா என வங்கி நிர்வாகங்கள் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்" எனவும் அறிவுறுத்தினார்.
அதன்பின் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
மேலும் படிக்க | ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சிஎஸ்கே-வின் மோசமான சாதனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR