தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை துவக்கி உள்ளார். இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் மாதம் இக்கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறும் எனவும் அம்மாநாட்டில் கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என சொல்லப்பட்டு வந்தது. தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டுக்கான இடத்தை சேலம், திருச்சி மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள இடங்களை ஆய்வு செய்த நிர்வாகிகள் திருச்சியில் நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் சொல்லப்பட்டு வந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் விக்கிரபாண்டியில் செப்டம்பர் மாதத்தில் முதல் மாநாடு நடைபெறும் என தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க | கலைஞர் முகம் பொறித்த 100 ரூபாய் நாணயம்! எங்கு எப்படி வாங்குவது?
வரும் செப்டம்பர் மாதம் மாநாடு நடைபெற இருக்கின்ற நிலையில் இந்த மாதம் 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதற்கான ஏற்பாடுகளும் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. வரும் 22 ஆம் தேதி தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருக்கின்ற 45 அடி உயரமுள்ள கொடிக்கம்பத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கொடியை ஏற்றி வைக்க இருக்கிறார்.
TVK Head Vijay hoisted a model flag of his party today as they're going to reveal the original flag next week!#TVKVijay @tvkvijayhq pic.twitter.com/lv6OxY8ysI
— syed (@syed0602) August 19, 2024
இந்நிலையில்தான் நேற்று மாலை எவ்வித அறிவிப்பும் இன்றி தலைமை அலுவலகத்துக்கு வந்த நடிகர் விஜய் மஞ்சள் நிறத்தில் நடுவில் விஜயின் படம் பொறிக்கப்பட்ட கொடியை கொடிக்கம்பத்தில் ஏற்றினார். ஏற்றிய சில நிமிடங்களிலேயே அந்த கொடி இறக்கப்பட்டது. கொடியேற்று நிகழ்ச்சிக்கான ஒத்திகை என நிர்வாகிகள் மட்டத்தில் தகவல் சொல்லப்பட்டாலும். நேற்று பவுர்ணமி தினம் என்பதால் கொடிக்கு பூஜை செய்து பின்னர் ஒத்திகை பார்த்திருப்பதாகவும் வேறு ஒரு தகவல் சொல்லப்பட்டு வருகிறது. கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்ததாக சொல்லப்படும் நிலையில் நேற்று நடிகர் விஜய் ஏற்றியது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கொடியா? அல்லது ஒத்திகைக்காக இந்த கொடி ஏற்றப்பட்டதா? கொடி அறிமுகம் செய்யப்படுவதாக சொல்லப்பட்டு இருக்கின்ற வரும் 22ஆம் தேதி வேறு கொடி அறிமுகப்படுத்தப்படுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ