Pongal Gift Hamper: காலை 6 மணிக்கு துவங்கி மாலை 6மணி வரை சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு புத்தாடை, பரிசு பணத்துடன் பொங்கல் பரிசுகளை வழங்கி வரும் திமுக பொதுக்குழு உறுப்பினரின் செயல் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினரும் , பிரபல தொழிலதிபருமான எஸ்.கே.பி.சீனுவாசனின் மனைவி திருமதி சாந்திசீனுவாசன் காஞ்சிபுரம் மாநகராட்சி 32 வது வார்டு மாமன்ற உறுப்பினராகவும், மண்டல குழு தலைவராகவும் உள்ளார்.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை தமிழகத்தில் நான்கு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கடைசி நாளான நேற்று காணும் பொங்கல் அன்று,தம் உறவினர்களை வீடுகளுக்கு சென்று சந்தித்து நலம் விசாரித்து அவர்களுடன் உறவுகளை புதுப்பித்துக் கொள்ளும் காணும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
காணும் பொங்கல் நாளன்று, காஞ்சி தெற்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினரான எஸ்.கே.பி சீனிவாசன், தமது பகுதி பொதுமக்களை தனது இல்லத்தில் சந்திப்பத்தை வழக்கமாக வைத்துள்ளார். அப்போது அவர்களுக்கு புத்தாடை மற்றும் பொங்கல் பரிசு வழங்கி அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்து தெரிவிப்பார்.
மேலும் படிக்க | களைகட்டியது போகி கொண்டாட்டங்கள்! கொரோனாவுக்கு பிறகு கோலாகல பொங்கல்
அதன்படி, நேற்று காணும் பொங்கல் நாளன்று, அவரை நேரில் சந்தித்து பொங்கல் பரிசு பொருட்களை பெற அப்பகுதி பொதுமக்கள் அல்லாது அனைவரும் அவரை சந்தித்து பொங்கல் பரிசு பொருட்கள் பெற நீண்ட வரிசையில் காத்து இருந்தன. காலை 6 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்வில் மாலை 6மணிவரையில் தொடர்ந்து தன்னை சந்திக்க வரும் பகுதி மக்கள் மற்றும் அனைவருக்கும் புத்தாடை மற்றும் பொங்கல் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்த அவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பொங்கல் பரிசினை பெற நீண்ட வரிசையில் காத்திருந்தப்ப்போது, அவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் குளிர்பானங்களை அவரது ஆதரவாளர்கள் வழங்கியதை, அனைவரும் பாராட்டுகின்றனர்.
மேலும் படிக்க | Flowers Price: பொங்கலால் கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை
பொங்கல் திருவிழா காலத்தில், காணும் பொங்கலை முன்னிட்டு ஒரே நாளில் நான்காயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் புத்தாடைகளையும் பரிசு பொருட்களையும் பெற்று சென்றுள்ளனர். தன்னை நாடிவரும் அனைவருக்கும் இன்று பொங்கல் பரிசுகளை வழங்கி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது நீண்ட காலமாக நடைபெற்று வருவது மக்கள் தங்களை வாழ்த்துவதும் எல்லையற்ற மகிழ்ச்சி அளிப்பதாக அக்குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் 48வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக், மெடிக்கல் ரவி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட, மாநகர திமுக நிர்வாகிகள், 32 வட்ட இளைஞரணியினர் உள்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.
தமிழக அரசு மாநிலத்தில் இருக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவித்தது. அதில், கரும்பு, சர்க்கரை, பச்சரிசி அடங்கிய தொகுப்பு அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோகம் செய்யப்பட்டது. அதனுடன் ஆயிரம் ரூபாயும் பொங்கல் பரிசு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பாலியல் தொழிலுக்காக பாகிஸ்தானிய பெண்களை 'இறக்குமதி' செய்யும் சீனா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ