TN Agri Budget 2021: தமிழக சட்டபேரவையின் முதல் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்

தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் இன்று சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 14, 2021, 09:32 AM IST
TN Agri Budget 2021: தமிழக சட்டபேரவையின் முதல் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் title=

தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் இன்று சட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக தாக்கல் செய்யப்பட உள்ள இந்த பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார்.

வேளாண் துறைக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட உள்ள இந்த பட்ஜெட்டில், வேளாண் துறை, கால்நடைத்துறை, பால்வளத்துறை ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, நலத்திட்டங்கள் ஆகியவை இடம் பெறும். 

மேலும் வேளாண் துறைக்கான புதிய தொழில்நுட்பங்கள், புதிய சாகுபடி முறைகள் மற்றும் விவசாயிகளின் உற்பத்தியாளர் குழுக்கள், உழவர் நலச் சங்கங்கள் மற்றும் வல்லுநர்களின் பங்களிப்புடன் விவசாயத்தை நவீனமயமாக்குதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பது தான் வேளாண்துறை பட்ஜெட்டின் குறிக்கோளாக இருக்கும். வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் குறித்து தமிழக ஆளுநரால் அறிவிக்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் (Banwarilal Purohit) ஜூன் மாதம் 16 வது சட்டசபையின் முதல் அமர்வில் உரையாற்றி போது இதைத்தெரிவித்தார்.

ALSO READ | TN Budget 2021: மகளிருக்கு பலன் அளிக்கும் திட்டங்கள்; முழு விபரம்..!!

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய திமுக அரசாங்கம் அளிட்த்ஹ தேர்தல் வாக்குறுதிகளில் தனி வேளாண் பட்ஜெட்டும் (Agriculture Budget) ஒன்றாகும். கர்நாடகா (Karnataka) மற்றும் ஆந்திராவுக்குப் (Andhra Pradesh) பிறகு, தமிழ்நாடு தனி விவசாய வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் (M Karunanidhi) நிறுவப்பட்ட உழவர் சந்தை (Uzhavar Santhai) மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் ஆளுநர் தனது உரையில் வலியுறுத்தி இருந்தார். பட்ஜெட் இதுபோன்ற பல சந்தைகளை மாநிலத்தில் நிறுவ முயற்சிக்கும்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் (Tamil Nadu Legislative Assembly) ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21 வரை நடைபெறும்.

ALSO READ | TN Budget 2021-22: PTR பட்ஜெடட்டில் எந்த துறைக்கு எவ்வளவு ஓதிக்கீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News