தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு கடந்த இரு வாரமாக முழு ஊடரங்கை அமல்படுத்தப்பட்ட நிலையில், தொற்று பாதிப்பு குறைந்து வருவதை தொடர்ந்து நாளை முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, கொரோனா தொற்று குறைந்து வரும் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் (TASMAC) எனப்படும் மது பானகடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.அதை அடுத்து டீ கடைகள் இயக்க அனுமதிக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழ் நாட்டில் கொரோனா பாதிப்புள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து, தொற்று குறைந்து வரும் இதர 27 மாவட்டங்களில் நாளை முதல் (2021, ஜூன் 14), தேநீர்க் கடைகள் காலை 6 மணி முதல், மாலை 5 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
எனினும் பார்சல் முறையில் மட்டுமே தேநீர் வழங்க வேண்டும் எனவும், பொது மக்கள் தேநீர் வாங்க அதற்கான பாத்திரங்கள் அல்லது ப்ளாஸ்குகளை கொண்டு செல்லுமாறும், ப்ளாச்டிக் பைகளில் தேநீர் வாங்குவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடைகளில் அல்லது கடைகளின் அருகே நின்று தேநீர் அருந்த அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | Tasmac கடைகள் நாளை திறக்கப்படும்: வெளியிடப்பட்டன வழிகாட்டு நெறிமுறைகள்
மேலும், உணவகங்களுக்கும் பேக்கரிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது போல, வீட் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கலாம். இங்கும் பார்சல் முறையில் மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது.
முன்னதாக மதுக்கடைகள் திறப்பதை கண்டித்து தமிழக பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது. தமிழகத்தில் முழு ஊரடங்கு (Lockdown) காரணமாக அனைத்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | TASMAC திறப்பு: இது தான் விடியலா.. வானதி சீனிவாசன் கேள்வி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR