தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தக்காளியின் விலை கடந்த சில மாதங்களாக தாறுமாறாக ஏறியது. இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் தக்காளி ஒரு கிலோவிற்கு 150 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது.
ஏறுமுகம்-இறங்குமுகமாய் தக்காளி விலை..!
இந்தியா முழுவதும் தக்காளியின் வரத்தை பொறுத்து அதன் விலை ஏறுவதும் இறங்குவதுமாய் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் ஒரு நாளைக்கு இருக்கும் தக்காளியின் விலை அடுத்தநாள் இருப்பதில்லை. ஒரு கிலோ தக்காளி, ரூபாய். 30-40 விற்ற காலம் மலையேறி சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளி சில்லறை விற்பனையில் 200 ரூபாய் வரை விற்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளியின் விலை கோயம்பேடு சந்தையில் 150 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆனால் நேற்று, கிலோவிற்கு 30 ரூபாய் குறைந்து 120 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்க்கப்பட்டது. இதில், முதல் ரக தக்காளி 120 ரூபாயாகவும், இரண்டாம் ரக தக்காளி கிலோவிற்கு 80 ரூபாயாக கோயம்பேட்டில் விற்க்கப்பட்டது. மூன்றாம் ரக தக்காளி அதற்கும் குறைவாக 70 ரூபாய்க்கு விற்க்கப்படுவதாக நேற்று சந்தை வியாபாரிகள் தெரிவித்திருந்தனர்.
மேலும் படிக்க | தக்காளி மாலையை போட்டுக் கொள்ள மறுத்த அண்ணாமலை
இன்றைய விலை நிலவரம்:
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்தது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகிறதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து சுமார் 600 டன் தக்காளி வந்திறங்கியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இனி வரும் நாட்களில் தக்காளியின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழக மக்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விலை இறங்க காரணம்..!
தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் தக்காளியின் விலை கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்தது வந்தது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தக்காளி விவசாயிகள் பலர் தக்காளி உழுவதை விட்டுவிட்டு வேறு காய்கறிகளை பயிரிட்டதுதான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என கூறப்பட்டது. இந்தியா முழுவதும், உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில்தான் தக்காளிகள் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த மாநிலங்களில் இருந்துதான் பிற மாநிலங்களுக்கும் தக்காளிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. பூச்சி பிரச்சனை இந்த மாநிலங்களில் எழுந்ததால்தான் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பூச்சி பிரச்சனை மட்டுமன்றி, இந்தியாவில் ஆங்காங்கே அடை மழை பெய்தது. டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கணமழையால் காய்கறிகளை பிற மாநிலங்களுக்கு எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தமிழகம் உள்பட தென்னிந்திய மாநிலங்கிளில் தக்காளியின் விலை அதிரடியாக அதிகரித்தது. தற்போது மழை குறைந்து வருவதால் தக்காளியின் ஏற்றுமதி சீராக நடைபெறவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், தக்காளி உள்பட பல காய்கறிகளின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும், தக்காளியின் பழைய நிலை வருவதற்கு இன்னும் சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.
இன்றைய காய்கறி விலை நிலவரம்:
கோயம்பேட்டில் இன்று தக்காளி மட்டுமன்றி வேறு சில காய்கறிகளின் விலைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் முழு விவரம், இதோ.
>அவரக்காய் ஒரு கிலோவிற்கு சுமார் 40 ரூபாயாக விற்கப்படுகிறது. பீட்ரூட் மற்றும் கத்திரிக்காய் கிலோ ஒன்றிற்கு தலா 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
>பச்சை குடைமிளகாய் ஒரு கிலோவுக்கு 60 ரூபாய்க்கும் சிகப்பு குடைமிளகாய் கிலோவிற்கு 180 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.
>கேரட் ஒரு கிலோவுக்கு 50 ரூபாயாகவும் பீன்ஸ் ஒரு கிலோவுக்கு சுமார் 100 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. இதன் விலையில் பல நாட்களாக மாற்றம் இல்லை.
>பெரிய வெங்காயம் கிலோ ஒன்றிற்கு சுமார் 25 ரூபாயாகவும் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.
>சிறிய உருளைக்கிழங்கு கிலோவுக்கு 60 ரூபாயாகவும் பெரிய உருளைகிழங்கு ஒரு கிலோவுக்கு 32 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.
மேலும் படிக்க | கோவை: அமலாக்கத்துறையினரின் சோதனை நிறைவு..! சிக்கிய ஆவணங்கள் என்னென்ன..?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ